மெரினாவில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா மற்றும் கருணாநிதி நினைவிடத்தை திறந்து வைத்த முதல்வர் மு.க ஸ்டாலின்

சென்னை மெரினா கடற்கரையில் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடம் மற்றும் கருணாநிதி நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்துள்ளார். கடந்த 2021-ம் ஆண்டு திமுக ஆட்சி அமைந்தவுடன், சென்னை மெரினாவில் ரூ.39 கோடியில் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு நினைவிடம் அமைக்கப்படும் என்று முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார். அதன்படி பொதுப்பணித்துறை சார்பில் கருணாநிதி நினைவிடம் மற்றும் டிஜிட்டல் அருங்காட்சியகம் பிரமாண்டமான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.

பேரறிஞர் அண்ணாவின் நினைவிடமும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணாவின் நினைவிடத்துக்கு உள்ளே சென்றவுடன் இளங்கோவடிகள், கம்பர் சிலைகள் நம்மை வரவேற்பது போன்று அமைந்துள்ளன. இந்த சிலைகள் அருகே அண்ணா அமர்ந்து புத்தகம் படிப்பது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது. அண்ணா சமாதிக்கு பின்னால் கருணாநிதி நினைவிடம் அமைந்துள்ளது. கருணாநிதி அமர்ந்து எழுதுவது போன்ற வெண்கல சிலை நிறுவப்பட்டுள்ளது, கருணாநிதியின் சமாதியில் ‘ஓய்வு இல்லாமல் உழைத்தவர் இங்கே ஓய்வு கொண்டிருக்கிறார்’ என்ற வாசகம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் இடம் பெற்றுள்ளது.

Read More – விளவங்கோடு தொகுதி காலி..தேர்தல் ஆணையத்திற்கு கடிதம்..!

இந்த நிலையில் மெரினா கடற்கரையில் கலைஞர் நினைவிடம் மற்றும் புதுப்பிக்கப்பட்ட அண்ணா நினைவிடத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்து வைத்தார். இது தொடர்பாக சமூகவலைதளங்களில் அவர் வெளியிட்டுள்ள வீடியோவில், கலைஞர் என்றாலே போராட்டம்தான், அவரது இறுதிப் போராட்டத்தின் அடையாளம் தான் இந்த நினைவிடம், என பதிவிட்டுள்ளார். அண்ணா, கருணாநிதி நினைவிடம் திறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர்கள், கீ. வீரமணி, வைகோ, நடிகர் ரஜினிகாந்த், கவிஞர் வைரமுத்து உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்