Krutrim AI Chatbot-ஐ அறிமுகம் செய்தார் Ola நிறுவனர்!

Krutrim AI Chatbot

நவீன உலகில் செயற்கை நுண்ணறிவு தளமான AI (Artificial Intelligence) என்ற தொழில்நுட்பம் வேகமாக வளர்ந்து வருகிறது. இதனால் அனைத்து துறைகளிலும் AI தொழில்நுட்பம் பயன்பாடு அதிகரித்து கொண்டே இருக்கிறது. முன்னணி நிறுவனங்கள் ஒவ்வொரு சிறப்பு அம்சங்களை முன்னிறுத்தி புது புது செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பங்களை வழங்கி வருகின்றனர்.

Read More – மிகவும் சக்திவாய்ந்த ப்ராசஸருடன் உலகளவில் அறிமுகமானது ஜியோமி 14 சீரியஸ்!

அந்தவகையில், சாட்டிங் அடிப்படையிலான செயற்கை நுண்ணறிவு தளமான Chatgpt, கூகுளின் ஜெமினி AI, சாம்சங்கின் கேலக்சி AI உள்ளிட்டவைகள் இருந்து வருகிறது. இதன் வரிசையில் தற்போது ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் தலைமையிலான செயற்கை நுண்ணறிவு ஸ்டார்ட் அப் நிறுவனமான க்ருத்ரிம் தங்களது AI Chatbot போன்ற ChatGPTயை அறிமுகப்படுத்தியுள்ளது.

Read More – ஆப்பிளை தூக்கி சாப்பிட்ட Honor Magic 6 Pro… உலக சந்தையில் அறிமுகம்!

இந்த AI சாட்பாட் ஓபன் பீட்டாவாக வெளியிடப்பட்டுள்ளது என்று ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியுள்ளார். அவர் கூறியதாவது, இது எங்களுக்கும், எங்கள் முதல் தலைமுறை தயாரிப்புக்கும் ஒரு தொடக்கமாகும், இன்னும் நிறைய வரவிருக்கிறது. Krutrim AI Chatbot-யில் சில மாயத்தோற்றங்கள் இருக்கும், ஆனால் மற்ற உலகளாவிய AI தளங்களை விட இந்திய சூழல்களுக்கு மிகவும் குறைவாக இருக்கும்.

இதனை கண்டுபிடித்து சரிசெய்வதற்கு கூடுதல் நேரம் பணியாற்றுவோம். இந்த தளத்தை நாங்கள் மேலும் மேம்படுத்துவோம் எனவும் கூறியுள்ளார். மேலும், க்ருத்ரிம் 10க்கும் மேற்பட்ட இந்திய மொழிகளை கொண்டுள்ளது. அதன்படி, ஆங்கிலம், இந்தி, தமிழ், பெங்காலி, மராத்தி, கன்னடம், குஜராத்தி மற்றும் ஹிங்கிலிஷ் ஆகிய மொழிகளில் உதவ தயாராக இருக்கிறது. க்ருத்ரிம் நமது தேசத்திற்கான AI மூலம் ஒரு புதிய சகாப்தத்தை எட்டியுள்ளது.

Read More – ஸ்மார்ட் வாட்சை தொடர்ந்து ஸ்மார்ட் மோதிரம்.. உலக மேடையில் வெளியிட சாம்சங் திட்டம்!

உலகத்துடன் இணைந்து புதுமைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார். இதனிடையே, ஓலா நிறுவனர் பவிஷ் அகர்வால் தலைமையிலான க்ருத்ரிம், யூனிகார்ன் அந்தஸ்தை பெற்ற முதல் செயற்கை நுண்ணறிவு நிறுவனமாகும். இந்நிறுவனம் இந்தியாவில் AI மேம்பாட்டுக்காக சூப்பர் கம்ப்யூட்டர் சூழல் அமைப்பை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்