விண்ணை தாண்டி வருவாயா ‘வாய்ப்பு போச்சு ரொம்ப நொந்துட்டேன்’- ஜனனி வேதனை!
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சிம்பு, நடிகை த்ரிஷா ஆகியோர் நடிப்பில் கடந்த 2010 -ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியான திரைப்படம் தான் விண்ணைத்தாண்டி வருவாயா. இந்த திரைப்படத்தில் விடிவி கணேஷ், உமா பத்மநாபன், த்ரிஷா அலெக்ஸ், பாபு ஆண்டனி, நாக சைதன்யா, கே. எஸ்.ரவிக்குமார் உள்ளிட்ட பலரும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்கள்.
read more- என்னால அப்படியும் நடிக்க முடியும்! ‘பில்லா’ குறித்து மனம் திறந்த நயன்தாரா!
இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்து இருந்தார். இந்த திரைப்படம் இன்றுவரை ரீ-ரிலீஸ் செய்தால் கூட கொண்டாட கூடிய அளவிற்கு ஆர்வத்துடன் இருக்கிறார்கள். அந்த அளவிற்கு படம் இளைஞர்களின் மனதை வெகுவாக கவர்ந்தது என்றே கூறலாம்.
14 வருடங்கள் நிறைவு
விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் வெளியாகி இன்றுடன் 14-ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதே தினத்தில் தான் படம் கடந்த 2010-ஆம் ஆண்டு வெளியானது. படம் வெளியாகி 14-ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகிறார்கள்.
read more- உறவு தொடரல…’அதான் வாய்ப்பு கொடுக்கல’…மணிரத்னம் பற்றி மது!!
முதலில் நடிக்க இருந்த ஜனனி
இந்த திரைப்படத்தில் நடிகை சமந்தா சிம்புவுக்கு ஜோடியாக இரண்டாவது ஹீரோயின் கதாபாத்திரத்தில் நடித்திருப்பார். அந்த கதாபாத்திரத்தில் நடிக்கவேண்டியது முதலில் ஜனனி தானாம். அந்த கதாபாத்திரத்தில் நடிக்க வைக்க முதலில் நடிகை ஜனனி தான் தேர்வும் செய்யப்பட்டாராம். பிறகு சில காரணங்கள் படத்தில் இருந்து அவரை தூக்கிவிட்டார்களாம்.
read more- இனிமே அவர் சொன்னா தான் நடிப்பேன்! சூர்யா போட்ட முக்கிய கண்டிஷன்?
அவரை தூக்கிவிட்டு தான் அந்த கதாபாத்திரத்தில் சமந்தாவை நடிக்க வைத்தார்களாம். இருப்பினும் தனக்கு தேடி வந்த அந்தவாய்ப்பு காரணமே சொல்லாமல் நீக்கப்பட்டு படத்தில் நடிக்க முடியாமல் போனது மிகவும் வேதனையாக இருந்தது எனவும், அந்த வேதனையில் இருந்து மீண்டு வருவதற்கே பல நாட்கள் ஆனது எனவும் நடிகை ஜனனி பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.