மேற்கு ஆப்பிரிக்காவில் கத்தோலிக்க சர்ச்சில் துப்பாக்கி சூடு.! 15 பேர் உயிரிழப்பு.!
மேற்கு ஆப்பிரிக்கா நாடுகளில் ஒன்றாக விளங்கும் புர்கினா பாசோ (Burkina Faso) எனும் நாட்டில் வடக்கு பகுதியில் அமைந்துள்ள கத்தோலிக்க தேவாலயத்தில் நேற்று வழக்கம் போல ஞாயிற்று கிழமை சிரப்பு நடைபெற்று வந்தது.
அந்த சமயம் திடீரென உள்ளே புகுந்த ஆயுதம் ஏந்திய பயங்கரவாதிகள் தங்கள் துப்பாக்கிகளால் தேவாலயத்தில் இருந்தவர்களை நோக்கி சுட்டுள்ளனர். இதில் சம்பவ இடத்திலேயே 15 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர் 2 பேர் படுகாயமுற்று மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
ReadMore – சீனாவில் அடுக்குமாடி குடியிருப்பில் பயங்கர தீ விபத்து! 15 பேர் பலி… பலர் காயம்
இந்த துப்பாக்கி சூடு பற்றி அறிக்கை தெரிவித்த உள்ளூர் மாவட்ட அதிகாரி கூறுகையில், இது ஒரு பயங்கரவாத தாக்குதல் என்றும், தங்கள் நாட்டில் இதுபோன்று, மக்கள் மீதான பயங்கரவாத தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் தெரிவித்தார். இது போன்ற தாக்குதல்கள் தற்போது தொடர்ச்சியாக நடைபெற்று வருவதாகவும், குறிப்பாக அவர்கள் கத்தோலிக்க கிறிஸ்தவர்களை சேர்ந்தவர்கள் தான் அதிகம் பாதிக்கப்படுவதாகவும் அவர் கூறினார்.
2011 – 2012ஆம் ஆண்டு ஏற்பட்ட உள்நாட்டு போருக்கு பிறகு இம்மாதிரியான தாக்குதல்கள் அதிகரித்து வருவதாகவும் இதுவரையில் 20 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்ததாகவும், 20 லட்சம் பேர் வேறு இடத்திற்கு இடம்பெயர்ந்து சென்றதாகவும் ஓர் ஆய்வு அறிக்கை கூறுகிறது.