நீங்க இல்லாம ‘குக் வித் கோமாளி’ பாக்க மாட்டோம்! வெங்கடேஷ் பட் முடிவால் கதறும் ரசிகர்கள்…
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘குக் வித் கோமாளி’ நிகழ்ச்சிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று சொல்லலாம். இதுவரை இதில் 4 சீசன்கள் வெற்றிகரமாக முடிந்து இருக்கும் நிலையில், விரைவில் 5-வது சீசன் தொடங்கப்படவுள்ளது. அதில் எந்தெந்த பிரபலங்கள் கலந்து கொள்வார்கள் என்பதனை பார்ப்போம்.
இந்நிலையில், இந்த நிகழ்ச்சியை பலருக்கும் பிடிக்கவே முக்கிய காரணமே நிகழ்ச்சியில் கோமாளியாக கலந்து கொள்ளும் பிரபலங்கள் ஒரு பக்கம் என்றாலும் மற்றோரு பக்கம் நிகழ்ச்சியில் நடுவராக இருக்கும் வெங்கடேஷ் பட் என்று கூறலாம். இவருக்காகவே பலரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியை பார்கிறார்கள் .
READ MORE- கல்லா கட்ட படக்குழு போட்ட மாஸ்டர் பிளான்! இந்தியன் 2 ரிலீஸ் குறித்த அப்டேட்!
இதனையடுத்து, ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுக்கும் விதமாக தற்போது அறிவிப்பு ஒன்றை வெங்கடேஷ் பட் வெளியிட்டுள்ளார். அது என்னவென்றால், தான் குக் வித் கோமாளி 5 நிகழ்ச்சியில் நடுவராக கலந்து கொள்ளமாட்டேன் என்று அறிவித்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது ” கடந்த சில மாதங்களாக பல்வேறு சமூக ஊடக தளங்களில் நான் குக் வித் கோமாளி 5-இல் நான் தொடர்ந்து நடுவராக கலந்த கொள்வதாக தகவல்கள் பரவி வருகிறது.
நான் குக் வித் கோமாளி சீசன் 5 நிகழ்ச்சியில் நடுவராக கலந்துகொள்வதை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன். என்னுடன் சேர்ந்து மில்லியன் கணக்கானவர்களை மகிழ்வித்த இந்த அற்புதமான நிகழ்ச்சியில் இருந்து விலகுவது சற்று வருத்தமாக இருக்கிறது. இந்த நிகழ்ச்சி என் உண்மையான ஜாலியான பக்கத்தைக் காட்டியது மற்றும் நான் நானாக இருப்பது போல் வசதியாக இருந்தது.
READ MORE- இளையராஜாவின் பயோபிக் படம் எடுக்க 2 இயக்குனர்களை தேர்வு செய்த தனுஷ்?
24 ஆண்டுகளுக்கும் மேலாக நான் அங்கம் வகித்த சேனலுக்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன், மேலும் எனக்கு வரும் மற்ற வாய்ப்புகளுக்குச் செல்ல முடிவு செய்துள்ளேன். எனவே, நான் இப்போது விலகி கொள்கிறேன். CWC 5 இன் புதிய அணிக்கு எனது வாழ்த்துக்கள்” என்று வெங்கடேஷ் பட் கூறியுள்ளார். இதனை பார்த்த ரசிகர்கள் நீங்கள் இல்லாம குக் வித் கோமாளி பாக்க மாட்டோம் என்று கூறி வருகிறார்கள்.