சென்னையில் தலைமை தேர்தல் ஆணையர் இன்றும் ஆலோசனை..!
நாடாளுமன்ற தேர்தல் தொடர்பாக சென்னையில் இன்று 2-வது நாளாக தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் தலைமையில் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது.
நாடாளுமன்றத் தேர்தல் தேதி விரைவில் அறிவிக்க உள்ளது. இதனால் அனைத்து அரசியல் கட்சிகளும் கூட்டணி பேச்சுவார்த்தை, தொகுதி பங்கீடு உள்ளிட்டவற்றில் ஈடுபட்டு வருகின்றன. இதற்கிடையில் தென் மாநிலங்களில் தேர்தல்கள் எந்தவித பிரச்சனையும் இல்லாமல் சுமூகமாக நடத்துவது குறித்து ஆலோசனை நடத்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் நேற்று சென்னை வந்தார்.
READ MORE- அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு எதிரான தேர்தல் முறைகேடு வழக்குகளில் நீதிமன்றம் முக்கிய உத்தரவு
நேற்றைய தினம் அரசியல் கட்சியை பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதல் நாள் ஆலோசனை கூட்டம் நேற்று நடந்து முடிந்த நிலையில் இன்று இரண்டாம் நாள் ஆலோசனை கூட்டம் நடைபெறுகிறது. இந்நிலையில், இன்றைய 2-வது நாள் ஆலோசனைக் கூட்டம் காலை 9 மணியளவில் தொடங்க உள்ளது.
இந்த ஆலோசனை கூட்டத்தில் தமிழ்நாடு, கர்நாடகா மற்றும் கேரளா மாநிலங்களை சார்ந்த மாநிலத் தலைமைத் தேர்தல் அதிகாரிகள், அம்மாநில காவல்துறை அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ்குமார் ஆலோசனையில் ஈடுபடஉள்ளர். இதற்கு பிறகு வருமான வரித்துறை துறை, ரயில்வே பாதுகாப்புப் படை, சுங்கத்துறை உள்ளிட்ட துறை அதிகாரிகளுடன் ஆலோசனை நடைபெற உள்ளது.