விவசாய தலைவர்களுக்கு எதிரான தேசிய பாதுகாப்புச் சட்டம் ரத்து!

NSA

விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்திய தேசிய பாதுகாப்புச் சட்டத்தை ரத்து செய்தது ஹரியானா அரசு.

குறைந்தபட்ச ஆதார விலை உறுதி செய்வது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாய அமைப்பினர் டெல்லியை முற்றுகையிடும் போராட்டத்தில் குதித்துள்ளனர். கடந்த 12ம் தேதி சலோ டெல்லி என்ற பேரணி போராட்டத்தை தொடங்கிய விவசாயிகள் பஞ்சாப் – ஹரியானா எல்லையான ஷம்பு என்ற பகுதியில் பல்வேறு மாநிலத்தை சேர்ந்த விவசாயிகள் கூட்டம் கூட்டமாக குவிந்து வருகின்றனர்.

அவர்களை டெல்லிக்குள் நுழையவிடாமல் எல்லை பகுதிகளில் கான்கிரிட் சுவர், புள்வெளி, சாலையில் ஆணி பதிப்பது உள்ளிட்ட பல்வேறு தீவிர தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளது. விவசாயிகள் போராட்டத்தையொட்டி துணை ராணுவம் மற்றும் காவல்துறையினர் குவிக்கப்பட்டுள்ளனர். இருப்பினும், அதனை பொருட்படுத்தாமல் விவசாயிகள் முன்னேறி வருகின்றனர். இதனால், கண்ணீர் புகை குண்டுகள் வீசி, விவசாயிகள் மீது காவல்துறை தாக்குதல் நடத்தி வருவதாகவும் தகவல் வெளியானது.

Read More – தீவிரமடையும் போராட்டம்… விவசாயிகள் மீது தேசிய பாதுகாப்பு சட்டம்!

இதனிடையே, மத்திய அரசுடன் நடத்திய 4 கட்ட பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்ததால் போராட்டத்தை தீவிரப்படுத்த விவசாயிகள் திட்டமிட்டுள்ளனர். இந்த சூழல், பஞ்சாப் – ஹரியானாவின் ஷம்பு எல்லையில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாய சங்க தலைவர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டதாக ஹரியானாவின் அம்பாலா காவல்துறை தெரிவித்திருந்தது.

இதுதொடர்பாக அம்பாலா காவல்துறை கூறியதாவது, அரசு மற்றும் தனியார் சொத்துக்களுக்கு ஏராளமான சேதங்கள் ஏற்பட்டுள்ளன. போராட்டக்காரர்களால் ஏற்பட்ட சேதம் குறித்த மதிப்பீடு செய்யப்பட்டு வருகிறது.  தினந்தோறும் தடுப்புகளை உடைத்து சட்டம் ஒழுங்கை சீர்குலைக்கும் முயற்சி நடைபெற்று வருகிறது. போராட்டக்காரர்கள் கற்களை வீசி தாக்குதல் நடத்தியதில் காவல்துறையினர் காயமடைந்து உள்ளனர்.

இதனால், விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போராட்டக்காரர்கள் மீது தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA) 1980ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறியது பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில், விவசாய சங்கங்களின் முக்கிய நிர்வாகிகள் மற்றும் போராட்டக்காரர்களுக்கு எதிராக பயன்படுத்திய தேசிய பாதுகாப்புச் சட்டம் (NSA), 1980-ஐ ஹரியானா அரசு ரத்து செய்தது.

இதுதொடர்பாக அம்பாலா ஐஜிபி சிபாஷ் கபிராஜ் கூறியதாவது, NSA-ஐப் பயன்படுத்துவதை மறுபரிசீலனை செய்ய காவல்துறை முடிவு செய்துள்ளது. அதாவது, விவசாய தலைவர்களுக்கு எதிராக என்எஸ்ஏ செயல்படுத்தப்படாது. அம்பாலாவை சேர்ந்த ஒரு சில விவசாய சங்கத் தலைவர்கள் மீது பயன்படுத்திய தேசியப் பாதுகாப்புச் சட்டத்தின் விதிகள் மறுபரிசீலனை செய்யப்பட்டு, அவ்வாறு செயல்படுத்தப்பட மாட்டாது என்றுள்ளார்.

மேலும், அமைதியை நிலைநாட்டவும், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட அதிகாரிகளுடன் ஒத்துழைக்கவும் போராட்டக்காரர்கள் மற்றும் அவர்களின் தலைவர்களுக்கு ஹரியானா காவல்துறை வேண்டுகோள் விடுத்துள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்