விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த 22 வயது விவசாயி..! இறப்பதற்கு முன் பேசிய உருக்கமான வார்த்தைகள்

விவசாயிகள் போராட்டத்தில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் நடந்த மோதலில் 22 வயதான விவசாயி உயிரிழந்த நிலையில் அவர் உயிரிழப்பதற்கு முன்னர் இறுதியாக பேசிய வார்த்தைகள் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. விளைபொருட்களின் குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு சட்டம் கொண்டுவர வேண்டும், வேளாண் கடன் தள்ளுபடி, விவசாயிகள் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, விவசாயிகள் போராட்டத்தை அறிவித்தனர்.

போராடும் விவசாயிகளை டெல்லிக்குள் நுழைய விடாமல் தடுக்க டெல்லி எல்லையில் போலீசார் குவிக்கப்பட்டனர். பஞ்சாப்பில் இருந்து புறப்பட்ட விவசாயிகள், பஞ்சாப் – ஹரியானா இடையே ஷாம்பு, கானாரி ஆகிய இடங்களில் உள்ள எல்லைகளில் தடுத்து நிறுத்தப்பட்டனர், மேலும் விவசாயிகள் டெல்லியை நோக்கி முன்னேறுவதைத் தடுக்க பஞ்சாப், ஹரியானா என டெல்லியை ஒட்டிய எல்லைகளில் போலீசார், துணை ராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஆந்திர முதல்வரின் சகோதரியும், மாநில காங்கிரஸ் தலைவருமான சர்மிளா கைது

இந்த நிலையில் நேற்று பஞ்சாப் – ஹரியானா இடையிலான கானாரி எல்லையில் விவசாயிகளுக்கும், போலீசாருக்கும் ஏற்பட்ட மோதலில் 22 வயதான விவசாயில் சுப்கரன் சிங் உயிரிழந்தார். இந்த நிலையில் உயிரிழப்பதற்கு முன்னர் அவர் இறுதியாக பேசிய வார்த்தைகள் குறித்து உருக்கமான தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, இறப்பதற்கு முன்னர் சுப்கரன் சிங் தனக்கும் சக விவசாயிகளுக்கும் காலை உணவு தயாரித்துள்ளார். அப்போது, “உணவைப் பகிர்ந்து கொள்ளவோ ​​அல்லது ஒன்றாக உட்காரவோ இன்னொரு வாய்ப்பு கிடைக்காமல் போகலாம்” என அருகில் இருந்தவர்களிடம் கூறியிருக்கிறார். சுப்கரன் சிங்கிற்கு இரண்டு சகோதரிகள் மற்றும் மன நலம் பாதிக்கப்பட்ட தந்தை உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth