மீதமிருந்த உணவை சாப்பிட்டது குற்றமா? பெண் பணியாளரை பணிநீக்கம் செய்து அதிர்ச்சி கொடுத்த நிறுவனம்

இங்கிலாந்து நாட்டில், நிறுவனம் ஒன்றில் தூய்மை பணியாளராக வேலை செய்து வந்த பெண்ணொருவர் மீதமிருந்த ஒரு சாண்ட்விச்சை சாப்பிட்டதால் பணிநீக்கம் செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தலைநகர் லண்டனில் உள்ள சட்ட நிறுவனம் ஒன்றில் கேப்ரியலா ரோட்ரிக்ஸ் என்ற பெண், தூய்மை பணியாளராக வேலை பார்த்து வந்தார்.

இந்த நிலையில் இந்த நிறுவனத்தில் அலுவலக ஆலோசனை கூட்டம் நடைபெற்ற போது அதில் கலந்துக் கொண்டவர்களுக்கு சாண்ட்விச் உணவு வழங்கப்பட்டது. கூட்டத்தில் கலந்து கொண்டவர்கள் சாண்ட்விட்ச்-ஐ சாப்பிட்டு விட்டு, மீதமுள்ளதை அங்கேயே விட்டு சென்றுள்ளனர். தூய்மைப் பணியாளரான கேப்ரியல்லா, அங்கு மீதம் இருந்த ஒரு சாண்ட்விச்சை எடுத்து சாப்பிட்டார். இது அங்கிருந்த சிசிடிவி கேமராவில் பதிவானது.

அமெரிக்க துணை ஜனாதிபதி பெயர் பட்டியல்.. இந்திய வம்சாவளியில் இருவர்…?

இச்சம்பவத்திற்கு பின்னர் கேப்ரியல்லாவை அழைத்து பேசிய நிர்வாகத்தினர், அவரின் செயலை குற்றச்சாட்டாக முன்வைத்து பணிநீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளனர். கேப்ரியல்லா, சாப்பிட்ட சாண்ட்விச்சின் விலை இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.157 ஆகும். இந்த சம்பவம் உலகளவில் வைரலாகியுள்ள பலரும் குறித்த நிறுவனத்தின் செயலுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் தான் பணியாற்றிய நிறுவனம் தன் மீது மறைமுக இன பாகுபாடு காட்டுவதாக கூறி கேப்ரியல்லா, சட்ட நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்