மணிப்பூர் மாநில கலவரத்திற்கான முக்கிய காரணம்…. உயர்நீதிமன்றம் அதிரடி நீக்கம்.!
மணிப்பூரில் உள்ள மெய்தி இனத்தை சேர்ந்த மக்கள், தங்கள் இனத்தை சேர்ந்தவர்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என மணிப்பூர் உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். மெய்தி இனத்தை பழங்குடியினர் பிரிவில் சேர்த்தால் தங்கள் இடஒதுக்கீடு பாதிக்கப்படும் என ஏற்கனவே பழங்குடியினர் பிரிவில் இருக்கும் குக்கி இன மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
அப்போது, மணிப்பூர் உயர்நீதிமன்றம், மெய்தி இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க வேண்டும் என மாநில அரசுக்கு உயர்நீதிமன்றம் பரிந்துரை செய்தது. இந்த பரிந்துரையை தொடர்ந்து, மணிப்பூரில் கடந்த வருடம் மே மாதம் குக்கி மற்றும் மெய்தி பிரிவினர் இடையே கடும் வன்முறை ஏற்பட்டது. இதில் இதுவரை சுமார் 180கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர் என கூறப்படுகிறது.
Read More – விவசாயி உயிரிழப்பு.. இரண்டு நாட்களுக்கு பேரணி ஒத்திவைப்பு..!
மணிப்பூரில் ஏற்பட்ட இந்த கலவரம் இந்தியா முழுக்க பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது. பெரும் உயிரிழப்பு, பாதிப்பை ஏற்படுத்திய உயர்நீதிமன்ற பரிந்துரையை தற்போது உயர்நீதிமன்றம் வாபஸ் பெற்றுள்ளது. இந்த வழக்கு மாநிலத்தில் ஏற்பட்ட பதற்ற நிலை காரணமாக விசாரணை நடைபெறாமல் இருந்தது.
இன்று, மெய்தி இன மக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க நடைபெற்ற வழக்கு விசாரணையில், மெய்தி இனமக்களை பழங்குடியினர் பிரிவில் சேர்க்க முன்னதாக வழங்கிய பரிந்துரையை மணிப்பூர் உயர்நீதிமன்றம் தற்போது வாபஸ் பெறுவதாக அறிவித்துள்ளது.