சைலண்டாக அடுத்த சம்பவத்திற்கு தயாரான லெஜண்ட் அண்ணாச்சி!

Legend Saravanan

சரவணன் ஸ்டோர்ஸ் உரிமையாளர் சரவணன் அருள் சினிமாவிலும் நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருடைய முதல் திரைப்படமான ‘தி லெஜண்ட்’ படத்தை இயக்குனர் ஜே.டி.–ஜெர்ரி ஆகியோர் இயக்கி இருந்தார்கள். இந்த திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் கடந்த 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது.

இந்த திரைப்படம் எதிர்பார்த்த அளவிற்கு பெரிய வெற்றியை பெறவில்லை என்றே கூறலாம். படத்தில் நடித்த சரவண அருள் பயங்கர ட்ரோல்க்கும் உள்ளாகினார் என்று கூட கூறலாம். இருப்பினும் ட்ரோல்கள் எல்லாத்தையும் மனதில் எடுத்துக்கொள்ளாமல் சரவண அருள் தனது அடுத்த படத்திற்கு தயாராகி வருகிறார்.

மகனை நாயகனாக களமிறக்கும் இயக்குனர் முத்தையா! பூஜையுடன் தொடங்கியது படப்பிடிப்பு!

அதன்படி, சரவணன் அருள் நடிக்கும் அடுத்த திரைப்படத்தை கொடி, எதிர் நீச்சல் ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் துரைசெந்தில் குமார் இயக்கவுள்ளார். இன்னும் இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை. தற்போது துரை செந்தில் குமார் சூரியை வைத்து கருடன் படத்தை இயக்கி வருகிறார். இந்த திரைப்படத்திற்கான போஸ்ட் ப்ரொடக்சன் பணிகள் மும்மரமாக நடைபெற்று வருகிறது.

இந்த படம் வெளியான பிறகு துரைசெந்தில் குமார் சரவணன் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தின் அப்டேட் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கிடையில், இன்று கோகுலம் ஸ்டுடியோவில் படத்தின் லுக் டெஸ்ட் நடந்து வருகிறதாம். முழுக்க முழுக்க படப்பிடிப்பு ஏப்ரல் முதல் தொடங்குகிறது, இதற்கிடையில் இயக்குனர் கருடன் போஸ்ட் புரொடக்ஷன் வேலைகளையும் முடிக்கிறார்.

விரைவில் துரைசெந்தில் குமார் சரவணன் அருள் ஹீரோவாக நடிக்கும் படத்தை யார் தயாரிக்கிறார். படத்தில் எந்தெந்த பிரபலங்கள் எல்லாம் நடிக்கிறார்கள் படத்திற்கு இசையமைப்பாளர் யார் என்பதற்கான அறிவிப்பும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்