‘அமரன்’ படத்தை தடை செய்ய கோரி இஸ்லாமிய அமைப்புகள் போராட்டம்!
நடிகர் சிவகார்த்திகேயன் நடித்துள்ள அமரன் படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி சர்ச்சையை கிளப்பிய நிலையில், படத்துக்கு தடை கோரி போராட்டம் வெடித்துள்ளது.
இயக்குனர் ராஜ்குமார் பெரியசாமி இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து முடித்துள்ள படத்தின் டைட்டில் டீசர் கடந்த 16ம் தேதி வெளியானது. SK21’ என்று தற்காலிகமாக பெயரிடப்பட்டிருந்த இந்த படத்திற்கு “அமரன்” என்று பெயரிடப்பட்டுள்ளது. படத்தில், இந்திய ராணுவத்தின் ராஜ்புத் ரெஜிமெண்டில் நியமிக்கப்பட்ட அதிகாரியாக இருந்த மேஜர் முகுந்த் வரதராஜனின் நிஜ வாழ்க்கை கதையில் சிவகார்த்திகேயன் நடித்திருக்கிறார்.
தற்பொழுது, இந்த படத்தில் முஸ்லிம்களை பயங்கரவாதிகளாக சித்தரிப்பதாகவும், மதக்கலவரத்தை தூண்டும் வகையில் இருப்பதாகவும் கூறி தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் போராட்டம் வெடித்துள்ளது.
இந்நிலையில், நடிகரும் மக்கள் நீதி மய்ய கட்சித் தலைவருமான கமல் ஹாசன் தயாரிப்பில் உருவாகும் ‘அமரன்’ திரைப்படத்தின் முன்னோட்ட காட்சியில், கஷ்மீர் இஸ்லாமிய மக்களை பயங்கரவாதிகளாக சித்தரித்திருப்பதாக, திருநெல்வேலியில் தமிழக மக்கள் ஜனநாயக கட்சியினர் கமல் ஹாசன் மற்றும் சிவகார்த்திகேயனின் உருவ பொம்மையை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன்…தெறிக்கும் தோட்டாக்கள்! பதறவிடும் டைட்டில் டீசர்.!
மேலும், I.N.D.I.A கூட்டணியில் கமல் ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியை சேர்க்க கூடாது என கோரிக்கை வைத்து போராட்டம் நடித்தி வருகிறார்கள். இதே போல், இந்த படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து கோவை உக்கடம் பேருந்து நிலையம் முன்பு முஸ்லிம் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.