நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்..!

M. K. Stalin

நாளை திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் காலை 11.30 மணியளவில் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளரும், தமிழ்நாடு நீர்வளத்துறை அமைச்சருமான துரைமுருகன் அறிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்”தமிழக முதல்வரும், திமுக தலைவருமான மு.க. ஸ்டாலின் தலைமையில், மாவட்டக் கழகச் செயலாளர்கள் மற்றும் தலைமைக் கழகத்தால் நியமிக்கப்பட்ட தொகுதி பார்வையாளர்கள் கலந்தாலோசனைக் கூட்டம் 22-ம் தேதி நாளை (வெள்ளிக்கிழமை) காலை 11.30 மணியளவில் காணொலி காட்சி வாயிலாக நடைபெறும்.

இக்கூட்டத்தில் மாவட்டக் கழகச் செயலாளர்கள், தொகுதி பார்வையாளர்கள் மற்றும் அமைச்சர் பெருமக்கள் அனைவரும் தவறாது கலந்து கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தல் பணிகள் குறித்து இக்கூட்டத்தில் ஆலோசனை நடந்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

திமுக சார்பில் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் பணிகளை மேற்கொள்ளவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் மூன்று குழுக்களை அமைத்து திமுக பொதுச்செயலாளர்  சமீபத்தில் உத்தரவு பிறப்பித்துள்ளார். அதன்படி தொகுதி பங்கீடு குறித்து அமைக்கப்பட்டு குழு அவர்கள் தங்கள் கூட்டணி கட்சியுடன் அவ்வப்போது பேச்சுவார்த்தை நடத்து வருகின்றன. இதற்கிடையில் இந்த கூட்டம் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்