4-வது டெஸ்டில் பங்கேற்காத 2 முக்கிய வீரர்கள்.. பிசிசிஐ அறிவிப்பு..!
இங்கிலாந்து அணிக்கு எதிராக 5 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ரோகித் சர்மா தலைமையிலான இந்திய அணி 2-1 என முன்னிலை பெற்றுள்ளது. முதல் போட்டியில் இங்கிலாந்தும், 2-வது போட்டியில் இந்தியாவும் வெற்றி பெற்றன. ராஜ்கோட்டில் நடந்த மூன்றாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 434 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்று 2-1 என முன்னிலை பெற்றது.
தற்போது ராஞ்சியில் நடைபெறும் போட்டியில் வெற்றி பெற்று தொடரை கைப்பற்ற வேண்டும் என இந்திய அணி முனைப்புடன் உள்ளது. அதே சமயம் இங்கிலாந்து கேப்டன் பென் ஸ்டோக்ஸ் தொடரை சமன் செய்ய வேண்டும் என முனைப்புடன் இருப்பார். இதுபோன்ற சூழ்நிலையில் 4-வது டெஸ்ட் போட்டி மிகவும்சுவாரசியமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ராஞ்சியில் நாளை மறுநாள் முதல் 4-வது டெஸ்ட் போட்டி தொடங்கவுள்ளது. இந்த போட்டியில் காயம் காரணமாக கே.எல் ராகுல் நீக்கப்பட்டுள்ளார். அதே நேரத்தில் நான்காவது டெஸ்ட் அணியில் இருந்து ஜஸ்பிரித் பும்ராவை பிசிசிஐ விடுவித்துள்ளது. இதனால் ராஜ்கோட்டில் நடைபெற்ற மூன்றாவது டெஸ்ட் போட்டி அணியில் இருந்து விடுவிக்கப்பட்ட முகேஷ் குமார் ராஞ்சியில் நடைபெறும் 4-வது போட்டியில் இந்திய அணியில் இணைந்துள்ளார்.
விராட் கோலி – அனுஷ்கா தம்பதிக்கு ஆண் குழந்தை..! மகிழ்ச்சியுடன் வெளியிட்ட பதிவு
இதன் காரணமாக நான்காவது டெஸ்டில் இந்தியா விளையாடும் 11 இல் மாற்றங்கள் இருக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. 4-வது டெஸ்ட் போட்டி குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் வெளியிட்ட அறிக்கையில் “பணிச்சுமை காரணமாக 4-வது போட்டியில் பும்ராவுக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளதாகவும், காயம் காரணமாக 4-வது டெஸ்டில் கே.எல்.ராகுல் நீக்கப்பட்டுள்ளார்.
இதுமட்டுமின்றி தர்மசாலாவில் நடக்கும் கடைசி மற்றும் 5-வது டெஸ்ட் போட்டியில் விளையாடுவாரா..? இல்லையா..? என்பது அவரது உடற்தகுதியை பொறுத்தே அமையும் ” என பிசிசிஐ தெரிவித்துள்ளது.
முதல் டெஸ்ட் போட்டியில் கே.எல் ராகுல் காயம் அடைந்தார். காயம் காரணமாக ராகுல் 2-வது மற்றும் 3-வது டெஸ்டில் இந்திய அணியில் இடம்பெறவில்லை. 3-வது டெஸ்ட் போட்டியில் கே.எல்.ராகுலுக்குப் பதிலாக தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்பட்டார். 3-வது போட்டியில் படிக்கல் களமிறங்கவில்லை. 4-வது டெஸ்டில் இருந்து ரஜத் படிதார் நீக்கப்படலாம். ரஜத் படிதார் சரியாக விளையாடவில்லை என்பதால் அவர் நீக்கப்பட்டு தேவ்தத் படிக்கல் அணியில் சேர்க்கப்படலாம்.
இந்திய அணி வீரர்கள்:
ரோஹித் சர்மா (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், சுப்மான் கில், ரஜத் படிதார், சர்ஃபராஸ் கான், துருவ் ஜூரல் (விக்கெட் கீப்பர்), கேஎஸ் பாரத் (விக்கெட் கீப்பர்), தேவ்தத் பாடிக்கல், ஆர் அஷ்வின், ரவீந்திர ஜடேஜா, அக்சர் படேல், வாஷிங்டன் சுந்தர், குல்தீப் யாதவ், முகமது. சிராஜ், முகேஷ் குமார், ஆகாஷ் தீப் ஆகியோர் அணியில் இடம்பெறுள்ளனர்.
???? NEWS ????
Jasprit Bumrah released from squad for 4th Test.
Details ???? #TeamIndia | #INDvENG | @IDFCFIRSTBank https://t.co/0rjEtHJ3rH pic.twitter.com/C5PcZLHhkY
— BCCI (@BCCI) February 20, 2024