#IPL 2024 : ஐபிஎல் தொடங்கும் தேதியை அறிவித்தார் லீக் தலைவர் ..! எப்போது தெரியுமா ..?

ipl

இந்தியாவில் வருடம்தோறும் நடைபெற்று வரும் ஐபிஎல் டி20 தொடருக்கு உலகம் முழுவதும் ரசிகர்கள் இருந்து வருகிறார்கள்.  இந்த ஆண்டிற்கான ஐபிஎல் தொடரின் 17-வது சீசன் தற்போது ஓரிரு மாதங்களில் தொடங்கும் என எதிர்பார்க்க பட்ட நிலையில் தற்போது மார்ச் மாதம் 22-ம் தேதி தொடங்கும் என ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் பத்திரிகையாளர்களிடம் இன்று தெரிவித்து உள்ளார்.

மலிங்காவை பின்னுக்கு தள்ளிய ஹசரங்கா..? என்ன சாதனை தெரியுமா..?

இந்த ஐபிஎல் தொடரின் நடைபெற போகும் முதல் 15 நாள் போட்டியின் அட்டவணையை முதலில் வெளியிட உள்ளதாக அவர் கூறி உள்ளார்.  இந்தியாவில் வருகிற ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் நாடாளுமன்ற தேர்தல் நடைபெறும் காரணத்தால் தான் இதுவரை ஐபிஎல் சீசன் 17-க்கான அட்டவணையை இன்னும் வெளியிடாமல் இருப்பதற்கான காரணமாகும் என்று அருண் துமால் கூறி உள்ளார்.

2009-ம் ஆண்டின் ஐபிஎல் தொடர் முழுவதுமாக இந்தியாவிற்கு வெளியே தென் ஆப்ரிக்காவில் நடத்த பெற்றது.  அதன் பின் 2014-ம் ஆண்டு பொது தேர்தல் காரணமாக பாதி போட்டிகள் இந்தியாவிலும், பாதி போட்டிகள் ஐக்கிய அரபு நாடுகளிலும் (UAE) நடைபெற்றது. பிறகு 2019-ம் ஆண்டு பொது தேர்தல்களை மீறி இந்தியாவில் ஐபிஎல் தொடர் நடைபெற்றது.

இந்த வருடம் முழு ஐபிஎல் போட்டிகளும் இந்தியாவில் நடைபெறும் எனவும் மேலும், ஜூன் மாதம் 5-ம் தேதி நடைபெற இருக்கும் டி20 உலகக்கோப்பையை கருத்தில் கொண்டு மார்ச் 22-ம் தேதி தொடங்கும் இந்த ஐபிஎல் தொடர் மே 26-ம் தேதி வரை நடைபெறும் எனவும் கூறினார்.

கடந்த ஐபிஎல் தொடரின் இறுதி போட்டியில் விளையாடிய சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகளுக்கு இடையே இந்த ஆண்டு ஐபிஎல் தொடரின் முதல் போட்டியாக நடைபெறும் என்றும் பத்திரிகையாளர்களிடம் ஐபிஎல் லீக்கின் தலைவரான அருண் துமால் கூறி உள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்