விரதம் இருப்பதின் அறிவியலும்..! ஆன்மீகமும்..! வாங்க தெரிஞ்சுக்கலாம்.!

fasting

நம் இறைவனை வழிபடும் முறையில் விரதமுறையும் முக்கியமானதாக கருதப்படுகிறது. இந்த விரதம் ஏன் இருக்கிறோம், விரதம் இருக்கும் போது நாம் கடைபிடிக்க வேண்டிய முறைகள் மற்றும் செய்யக்கூடாதது எது என்பது பற்றி இப்பதிவில் தெரிந்து கொள்வோம்.

விரதத்தின் ஆன்மீக காரணம் :

எந்த ஒரு கடவுளும் தன்னை வருத்திக் கொண்டு தான் பிரார்த்தனைகள் செய்ய வேண்டும் என கூறவில்லை ஆனால் நாம் தான் இறைவனின் மீது கொண்டுள்ள அதீத பக்தியாலும் அன்பினாலும் அதை வெளிப்படுத்தும் விதமாக விரதம் மேற்கொள்கின்றோம். விரதம் மேற்கொள்ளும் போது நம் பிரார்த்தனைகளை கடவுளின் மீது வைத்து ஒரு நம்பிக்கையும் உருவாக்கப்படுகிறது  .

விரதத்தின் அறிவியல் காரணம் :

நமது உடல் அன்றாடம் ஒரு எந்திரம் போல் இடைவிடாமல் செயல்படுகிறது, நாமும் அன்றாடம் உணவுகளை திணித்து கொண்டே தான் இருக்கின்றோம். ஆகவே இந்த விரதத்தின் மூலம் உள் உறுப்புகளின் வேலைகளுக்கு ஓய்வு கொடுக்கப்படுகிறது .இதனால் உள்ளுறுப்புக்கள் தன்னைத் தானே சுத்திகரித்து கொள்கிறது அதாவது விரதம் இருப்பதன் மூலம் நம் உடலை சர்வீஸ் செய்து கொள்ளலாம் என்று நினைத்துக் கொள்ளுங்கள் .

விரதம் மேற்கொள்ளும் போது செய்ய வேண்டியது:

விரதம் இருக்கும் போது தண்ணீர் அதிக அளவு எடுத்துக் கொள்ள வேண்டும். ஏனென்றால் நாம் ஒரு பொருளை கழுவ வேண்டும் என்றால் தண்ணீரை கொண்டு தான் சுத்தம் செய்வோம், அதுபோல்தான் விரதம் இருக்கும் போது அதிகமான தண்ணீரை எடுத்துக் கொண்டால் குடல் வால் வுகளில் உள்ள கழிவுகள் சுத்தம் செய்யப்படுகிறது. இந்த வால்வுகளில் அடைப்பு ஏற்படுவதன் மூலம் தான் மாரடைப்பு வருகிறது.

எனவே அவ்வப்போது விரதம் முறைகளை மேற்கொள்ளும் போது நம் உடலில் உள்ள கழிவுகள் வெளியேறி உள் உறுப்புகளுக்கு ஓய்வும் கிடைக்கும். அன்றைய தினம் இறைவனின் நாமத்தை கூறிக் கொண்டே இருக்க வேண்டும்.

செய்யக்கூடாதவைகள்:

சுடு தண்ணீர் குடிக்க கூடாது. குறிப்பாக தண்ணீர் குடிக்காமல் விரதம் மேற்கொள்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும் ,அது எந்த விரதம் முறையாக இருந்தாலும் சரி. ஏனெனில்  நம் உடலில் அது நீர் சத்து குறைவை ஏற்படுத்தி விடும் இதனால் பாதிப்பு தான் ஏற்படும் எனவே தண்ணீர் குடிக்காமல் விரதம் மேற்கொள்வதை தவிர்க்கவும்.

பால், ஜூஸ். சூப் வகைகள் போன்றவற்றையும் தவிர்க்கவும்.  அதிகமான வேலைகளை செய்யக்கூடாது அன்று ஓய்வு எடுப்பது மிக மிக நல்லது.பகலில் தூங்குவதை தவிர்த்து இரவில் உறங்கிக் கொள்ளலாம். சிவராத்திரி, வைகுண்ட ஏகாதசி விரதம்  மேற்கொள்ளும் போது மட்டும் இரவில் தூங்கமால் இருக்கலாம் .

ஆகவே நாம் விரதம் இருப்பதால் நம் உடலுக்கு ஓய்வு கிடைத்துவிடும் இதனால் மனதுக்கும் அமைதி கிடைக்கும். எனவே நம் உடலின் நலனுக்காகவாவது அவ்வப்போது விரத முறைகளை கடைப்பிடித்து உடலையும் சுத்திகரித்து இறைவனின் அருளையும் பெறுவோம்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்