முக்கொம்பை பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்..!!“கோமா” நிலையில் அ.தி.மு.க அரசு..!எனவும் விமர்சனம்..!!
திருச்சி முக்கொம்பு அணையில் 9 மதகுகள் உடைந்தது.மேலும் இதனை சீரமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.இதனை இன்று பார்வையிட்டார் திமுக தலைவர் மு.க ஸ்டாலின்.உடைந்த மதகுகளையும் ,சீர அமைப்பு பணியையும் பார்வையிட்ட பின் பேசிய அவர் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்களின் கூற்றுப்படி, “காய்ச்சல்” வந்து மதகுகளை இழந்திருக்கும் முக்கொம்பு அணையினை இன்று பார்வையிட்டேன் என்று தெரிவித்தார்.மேலும் கமிஷனும் – ஊழலும் நிறைந்து, இன்றைக்கு “கோமா” நிலையில் இருந்துவரும் அ.தி.மு.க அரசு விரைந்து செயல்பட்டு இதனை சரிசெய்திட வேண்டுமென வலியுறுத்துகிறேன் என்று தெரிவித்துள்ளார்.
இதன் பின் கடைமடை விவசாயிகளை சந்தித்து பேசியது,மேட்டூர் அணை திறக்கப்பட்டு 47 நாட்கள் ஆகியும், இன்னும் தண்ணீர் வந்து சேராத கடைமடை விவசாயிகளை சந்தித்தேன். அ.தி.மு.க அரசைப் பொறுத்தவரைக்கும் கமிஷனை தூர்வாரிக்கொண்டு இருக்கிறார்களே தவிர, “கால்வாய்களை தூர்வாரும் நிலையில் இல்லை” என்பது தான் விவசாயிகளின் குமுறலாக இருக்கிறது என தெரிவித்துள்ளார்.
DINASUVADU