இனிமே அப்படி நடிக்காதீங்க! வேதனையுடன் அனுபமாவுக்கு கோரிக்கை வைத்த ரசிகர்!
பிரேமம் படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான நடிகை அனுபமா பரமேஸ்வரன். இவர் இந்த திரைப்படத்திற்கு பிறகு சமூக வலைத்தளங்களில் கிளாமரான உடை அணிந்துகொண்டு புகைப்படங்களை வெளியீட்டு வருகிறார். அனுபமாவுக்கு ரசிகர்கள் வர முக்கிய காரணமே அவர் ஹோம்லியான லுக்கில் நடிப்பது தான் என்றே கூறலாம்.
எனவே, கவர்ச்சியான புகைப்படங்களை அவர் வெளியீட்டாலே ரசிகர்கள் சற்று அதிர்ச்சியாவது உண்டு. ரசிகர்களுக்கு மேலும் அதிர்ச்சி கொடுக்கும் விதமாகவும் அனுபமா பரமேஸ்வரன் கவர்ச்சி மற்றும் லிப் லாக் காட்சிகள் கொண்ட படங்களிலும் நடிக்க தொடங்கிவிட்டார். குறிப்பாக ஏற்கனவே, ரவுடி பாய்ஸ் என்ற படத்தில் முத்த காட்சியில் நடித்து இருந்தார்.
அதனை தொடர்ந்து தற்போது ‘டிஜே தில்லு 2’ என்ற படத்தில் நடித்து இருந்தார். அந்த படத்தின் ட்ரைலர் கூட கடந்த சில நாட்களுக்கு முன்பு வெளியானது. அந்த ட்ரைலரில் லிப் லாக் காட்சியில் நடித்திருந்தார். அதனைப்போலவே இதுவரை இல்லாத அளவிற்கு கிளாமராகவும் இருந்தார். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த ரசிகர் ஒருவர் இனிமேல் இதுபோன்ற காட்சிகளில் நடிக்காதீர்கள் என வீடியோவை வெளியீட்டு கோரிக்கை வைத்துள்ளார்.
இத்தனை கோடி வேணும்! சம்பள விஷயத்தில் கண்டிஷன் போடும் ஜான்வி கபூர்!
வீடியோவில்அனுபமாவின் ரசிகர் தனது வீட்டிற்குள் பெரிய அனுபமாவின் புகைப்படத்தின் பக்கத்தில் நின்று கொண்டு ” உங்களுடைய போட்டோவை என் காரில் எதற்காக வைத்தேன் என்று உங்களுக்கு தெரியுமா? நீங்கள் ஒரு காலத்தில் நடித்த படங்கள் தான் காரணம். குறிப்பாக பிரேமம், சதமனம் பவதி, ஆகிய படங்கள் பண்ணியிருக்கீங்க.. இப்போ ரவுடிபாய்ஸ், தில்லு ஸ்கொயர் படங்களில் நடிக்கிறீங்க.
நீங்கள் சாவித்திரி, சௌந்தர்யா போன்ற படங்களை தேர்வு செய்து நடிப்பீர்கள் என்று ஒரு காலத்தில் நினைத்தோம். ஆனால் இப்போது நீங்கள் செய்வது எங்களுக்குப் பிடிக்கவில்லை’ இனிமேல் இதுபோன்று நடிக்காதீர்கள்” என்று அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது.
#TilluSquare ట్రైలర్ చూసి గుండె పగిలిన @anupamahere అభిమాని, తన బాధ చెప్పుకున్నాడు. pic.twitter.com/Wnc4yRB1oA
— Actual India (@ActualIndia) February 18, 2024