ரூ.365 கோடியில் 2000 மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகள்..!
நிதியமைச்சர் தங்கம் தென்னரசு சட்டசபையில் 2024-2025-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை தாக்கல் செய்தார். அப்போது மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி திட்டம் குறித்து அறிவித்தார். அதில் “தரமான சாலை வசதிகளை கடைக்கோடி கிராம மக்களும் எளிதில் பெற்று பயன்பெறும் வகையில் அறிமுகப்படுத்தப்பட்ட முதல்வர் கிராம சாலை மேம்பாட்டு திட்டத்திற்கு 2024- 2025 ஆம் ஆண்டில் 2000 கிலோமீட்டர் சாலை மேம்பாட்டு பணிகள் 1000 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் அனைத்து கிராமங்களும் அடிப்படை வசதிகளை கொண்டுதன்னிறைவு பெற்றிடும் வகையில் செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் இரண்டின் கீழ் 2024 25 ஆண்டில் 2482 கிராம ஊராட்சிகளில் 1147 கோடி ரூபாய் பணிகள் மேற்கொள்ளப்படும்.திமுக ஆட்சியில் கடந்த மூன்று ஆண்டுகளில் ஊரக பகுதிகளில் உள்ள வீடுகளுக்கு 46 லட்சம் குடிநீர் இணைப்புகளை வழங்கி உள்ளது.
கலைஞரின் கனவு இல்லம்… 6 ஆண்டுகளில் 8 லட்சம் கான்கிரீட் வீடுகள்..!
மேலும் ஊரக பகுதிகளில் உள்ள பழைய மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டிகளுக்கு பதிலாக 365 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 2000 புதிய மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிகளை இந்த ஆண்டு அமைக்கப்படும் என அறிவித்தார். மேலும், மகாத்மா காந்தியின் தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தை நாட்டிலேயே மிக சிறப்பாக செயல்படுத்தி வரும் மாநிலமாக தமிழகம் உள்ளது.
தமிழ்நாட்டில் இத்திட்டத்தின் மூலம் பயனடைந்து வரும் 92 லட்சம் பயனாளி பயனாளர்களில் 26 லட்சம் ஆதிதிராவிடர்களும், 1.6 லட்சம் பழங்குடியினரும் அடங்குவர். அதிலும் குறிப்பாக 79லட்சம் பெண்கள் இந்த திட்டத்தின் மூலம் பயனடைவது குறிப்பிடத்தக்கது. 2024-25 ஆம் ஆண்டில் இத்திட்டத்திற்காக 3300 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது ” என அறிவித்தார்.