கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு!

kalaignar magalir urimai thogai

தமிழ்நாடு சட்டப்பேரவையில் 2024-25ம் ஆண்டுகக்கான பொது பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு இன்று தாக்கல் செய்தார். இதில் பல்வேறு அறிவிப்புகள், திட்டங்கள் மற்றும் நிதி ஒதுக்கீடு என வெளியிடப்பட்டு வருகிறது. அப்போது, கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்கு இந்த ஆண்டு ரூ.13,720 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது.

இதுதொடர்பாக பட்ஜெட்டில் அமைச்சர் பேசியதாவது, ஒரு சமூகத்தில் பெண்கள் அடையும் வளர்ச்சியை கொண்டே அச்சமூகத்தின் வளர்ச்சியை கொண்டே மதிப்பிட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கூறியுள்ளார். அந்த வழியில், ஆணுக்கு இணைய பெண் என்ற சரிநிகர் சமத்துவ பாதையில் மகளிர் நலன் காக்க பல்வேறு நலத்திட்டங்களை தீட்டி தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.

கீழடியில் ரூ.17 கோடி செலவில் திறந்தவெளி அரங்கம்..!

நாட்டிற்கே முன்னோடியாக பெண்களுக்கு சொத்து உரிமை வழங்கி, கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் உள்ளாட்சி அமைப்புகளில் தனி இட ஒதுக்கீடு அளித்தது முதல் அவர்களுக்கு விடியல் பயணம் திட்டம் வரை புதுமையான திட்டங்கள் பெண்களுக்கு அறிமுகப்படுத்தப்பட்டன.

அந்த வரிசையில் சொன்னதை செய்வோம், செய்வதை சொல்வோம் என்ற இலக்கின்படி, செயல்பட்டு அறிவிக்கப்பட்ட கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்தின் மூலம் ஒரு கோடியே 15 லட்சம் குடும்ப தலைவிகளுக்கு ஒவ்வொரு மாதமும் ரூ.1000 அவர்களது வங்கி கணக்கில் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது.

விலைவாசி உயர்வால் தொடர்ந்து அதிகரிக்கும் குடும்ப செலவால் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் என்பது அவர்களது அன்றாட வாழ்க்கைகள பெரு உதவியாக உள்ளது. அதுமட்டுமில்லாமல் இந்த திட்டம் சேமிப்புக்கு வழிவகுக்கிறது.

இந்த திட்டத்துக்கு மக்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. எதிர்காலத்தில் இந்த திட்டத்தை நாடே பின்பற்றும் என்று நம்புகிறோம். எனவே, மகளிர் நலன் காக்கும் கலைஞர் மகளிர் உரிமைத்தொகை திட்டத்துக்காக இந்த ஆண்டு ரூ.13,720 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்படுவதாக அமைச்சர் தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்