AI, புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு!
தமிழக அரசின் 2024-25ஆம் ஆண்டுக்கான பொது பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்பட்டது. நிதியமைச்சர் தங்கம் தென்னரசு முதல் முறையாக பட்ஜெட்டை தாக்கல் செய்து வைத்தார். தமிழ்நாடு அரசின் பட்ஜெட்டில் மாபெரும் தமிழ் கனவு என்ற தலைப்பில் 7 முக்கிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளன.
சிலப்பதிகாரம், மணிமேகலை 25 மொழிகளில் மொழிபெயர்ப்பு செய்ய ரூ.2 கோடி ஒதுக்கீடு..!
தமிழக அரசின் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்த அமைச்சர் தங்கம் தென்னரசு ஒவ்வொரு அறிவிப்பாக வெளியிட்டு வருகிறார். அதன்படி, செயற்கை நுண்ணறிவு (AI) உள்ளிட்ட புதிய தொழில்நுட்பங்களை ஊக்குவிக்க ரூ.5 கோடி ஒதுக்கீடு செய்யப்படுவதாக பட்ஜெட்டில் அமைச்சர் அறிவித்துள்ளார்.
தமிழ் மொழியை நவீனப்படுத்த தொழில்நுட்பத்தை ஊக்கப்படுத்த அரசு முடிவு செய்திருப்பதாக தெரிவித்தார். இதனிடையே, பட்ஜெட்டில் வெளிவந்த அறிவிப்புகள், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரிய நூல்களை மின்பதிப்பாக்க ரூ.2 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. மொழி தொழில்நுட்ப புத்தொழில் நிறுவனங்களுக்கு ரூ.5 கோடியும், தரணியெங்கும் தமிழ் திட்டத்துக்கு ரூ.2 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டது.