காங்கிரஸ் தலைவராக செல்வப்பெருந்தகை நியமனம்….முதல்வர் வாழ்த்து..!

M. K. Stalin

தமிழக காங்கிரஸ் தலைவராக இருந்த கே.எஸ்.அழகிரி கடந்த 2019-ஆம் ஆண்டு பதவியேற்று கொண்டார். அவர் தலைமையில் காங்கிரஸ் 2019 நாடாளுமன்ற தேர்தல், 2021 சட்டசபை தேர்தலை சந்தித்துள்ளது. அவர் தொடர்ந்து 5 வருடங்களாக தலைவர் பதவியில் இருந்த நிலையில் தற்போது தமிழக காங்கிரஸ் கட்சியின் புதிய தலைவராக செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டுள்ளார்.

தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக கே.செல்வப்பெருந்தகை நியமிக்கப்பட்டத்திற்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் தளத்தில் “இந்தியா கூட்டணியில் அங்கம் வகிக்கும் தமிழக காங்கிரஸ் கட்சியின் -இன் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ள சகோதரர் திரு. செல்வப்பெருந்தகை அவர்களுக்கு எனது நெஞ்சார்ந்த வாழ்த்துகள்!

கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியைச் சிறப்பாக வழிநடத்தி வெற்றிகள் பல குவித்திட்ட அருமை நண்பர் கே.எஸ்.அழகிரி அவர்களது எதிர்காலப் பணிகள் சிறக்கவும் – காங்கிரஸ் சட்டமன்றக் குழுத் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ராஜேஷ் குமார் அவர்களது செயல்பாடுகள் சிறக்கவும் வாழ்த்துகிறேன். இணைந்து பயணிப்போம்! #INDIA-வை வெற்றிபெறச் செய்வோம்! என பதிவிட்டுள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்