சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே நாளை 44 மின்சார ரயில் சேவைகள் ரத்து

சென்னை கடற்கரை – தாம்பரம் இடையே பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை காலை முதல் பிற்பகல் வரை மின்சார ரயில் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளது. அதன்படி பிப்ரவரி 18ஆம் தேதியான நாளை 44 மின்சார ரயில்கள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவிப்பு வெளியிட்டுள்ளது. சென்னை எழும்பூர்- விழுப்புரம் ரெயில்வே வழித்தடத்தில் கோடம்பாக்கம்- தாம்பரம் இடையே தண்டவாள பராமரிப்பு பணி நாளை காலை 11 மணி முதல் மதியம் 3.15 மணி வரை நடைபெற உள்ளது.

இதையொட்டி சென்னை கடற்கரை – தாம்பரம், கடற்கரை – செங்கல்பட்டு, தாம்பரம் – கடற்கரை, செங்கல்பட்டு – கடற்கரை, காஞ்சீபுரம் – கடற்கரை, திருமால்பூர் – கடற்கரை இடையே இயக்கப்படும் 44 மின்சார ரெயில் சேவைகள் ரத்து செய்யப்படுவதாக தெற்கு ரெயில்வே அறிவித்துள்ளது. நாளை காலை 11 மணி முதல் மாலை 3.15 மணி வரை குறிப்பிட்ட இந்த வழித்தடத்தில் ரயில்கள் இயக்கப்படாது.

மக்களவை தேர்தல் பரப்புரையைத் தொடங்கியது திமுக..! மு.க ஸ்டாலின் அறிவிப்பு

இதனிடையில் தெற்கு ரயில்வேயின் பராமரிப்பு பணிகள் காரணமாக நாளை கூடுதலாக மாநகர பேருந்துகள் இயக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தாம்பரம் – சென்னை கடற்கரை வரை உள்ள வழித்தடத்தில் வழக்கமாக இயங்கும் பேருந்துகளுடன் கூடுதலாக 150 பேருந்துகள் இயக்கபடும் என சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்