மாந்திரீகனாக மிரட்டிய மம்மூட்டியின் ‘பிரம்மயுகம்’ படத்தின் இரண்டு நாள் வசூல்.!
மலையாள நடிகர் மம்முட்டி நடிப்பில் வெளியான ‘பிரம்மயுகம்’ திரைப்படம் வெளியான இரண்டு நாட்களில் ரூ.5.5 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
கேரளாவை பின்னணியாக வைத்து உருவாகியுள்ள ‘பிரம்மயுகம்’ படத்தை இயக்குனர் ராகுல் சதாசிவன் இயக்கியிருக்கிறார். இப்படத்தில் மம்முட்டி தவிர அர்ஜுன் அசோகன், சித்தார்த் பரதன், அமல்டா லிஸ் ஆகியோர் நடித்துள்ளனர்.
நைட் ஷிப்ட் ஸ்டுடியோஸ் உடன் இணைந்து வொய் நாட் ஸ்டுடியோஸ் இப்படத்தை தயாரிக்க, கிறிஸ்டோ சேவியர் இசையமைத்துள்ளார். ஷஃபிக் முகமது அலி படத்தொகுப்பைக் கவனிக்க, படத்தின் ஒளிப்பதிவுவை ஷெஹ்னாத் ஜலால் செய்திருக்கிறார்.
மம்முட்டி நடிப்பில் சமீபத்தில் வெளியான யாத்ரா 2 படத்திற்குப் பிறகு, அவரது புதிய ஹாரர் த்ரில்லர் படமான ‘பிரம்மயுகம்’ திரைப்படம் காதலர் தினத்தின் அடுத்த நாளான பிப்ரவரி 15ம் தேதி திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்களிடம் மிகுந்த வரவேற்பைப் பெற்றதாகத் தெரிகிறது.
சர்ச்சையில் சிக்கிய மம்மூட்டியின் கதாபாத்திரம்…கடைசியில் நடந்த மாற்றம்!
ரூ.27 கோடி பட்ஜெட்டில் உருவான இப்படம் முதல் நாளிலேயே ரசிகர்களின் அமோக வரவேற்பு கிடைத்து வருகிறது. தற்பொழுது ஒரு தகவலின்படி, இப்படம் முதல் நாளில் ரூ.3.1 கோடி வசூலித்தது என்றும், அதன் இரண்டாவது நாளில் இந்தியாவில் ரூ.2.5 கோடி எனவும் மொத்தமாக இப்படம் ரூ.5.6 கோடி ரூபாய் வசூலித்திருக்கும் என் கணக்கிடப்பட்டுள்ளது.