லிப்லாக் காட்சியா நோ..நோ..! கமல் படத்தில் நடிக்க மறுத்த சாய் பல்லவி!
நடிகை சாய் பல்லவி பெரிதாக முத்த காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் இல்லாத படங்கள் மற்றும் தன்னுடைய கதாபாத்திரம் எந்த அளவிற்கு பேசப்படுகிறது அதைப்போன்ற கதாபாத்திரங்கள் கொண்ட படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருகிறார் . இதுவரை அவர் மலையாளத்திலும் சரி, தமிழிலும் சரி, அவர் நடிக்கும் படங்கள் எல்லாம் அந்த மாதிரி தான் இருக்கும்.
இப்படியான படங்களை மட்டுமே தேர்வு செய்து நடித்து வருவதாலே சாய் பல்லவிக்கு என்று தனி ரசிகர்கள் கூட்டமே இருக்கிறது என்று கூறலாம். இந்த நிலையில் இது தற்போது தெலுங்கு மற்றும் தமிழில் பல படங்களில் நடித்து வருகிறார். இந்நிலையில், முத்த காட்சிகள் மற்றும் படுக்க அறை காட்சிகள் இருந்ததால் சாய் பல்லவி கமல் படத்திலே நடிக்க மறுத்துவிட்டாராம்.
நான் வாந்தி எடுத்ததை என்ன சாப்பிட சொல்றீங்களா? இயக்குனரிடம் பொங்கிய இளையராஜா!
இந்த தகவலை நடிகரும், சினிமா விமர்சகருமான பயில்வான் ரங்கநாதன் சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்துப்பேசிய பயில்வான் ரங்கநாதன் ” சாய் பல்லவி பொதுவாகவே முத்தக்காட்சிகள் மற்றும் படுக்கை அறை காட்சிகள் கொண்ட படங்களில் நடிக்க மாட்டார். அதைப்போலவே கவர்ச்சியாக எதாவது கதாபாத்திரத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தாலும் அதிலும் நடிக்க மாட்டார்.
சாய் பல்லவி தன்னை தேடி வரும் தயாரிப்பாளர்களிடம் தான் கவர்ச்சி உடை அணிந்து நடிக்க மாட்டேன் லிப் லாக் காட்சியில் நடிக்கமாட்டேன் என்று கூறிவிடுவார். சாய் பல்லவிக்கு கமலஹாசனுடன் ஒரு படத்தில் இணைந்து நடிப்பதற்கான வாய்ப்பு வந்தது. ஆனால், சாய் பல்லவி அந்த படத்தில் நடிக்க சம்மதம் தெரிவிக்கவில்லை மறுப்பு தெரிவித்துவிட்டார்” எனவும் பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.