நான் வாந்தி எடுத்ததை என்ன சாப்பிட சொல்றீங்களா? இயக்குனரிடம் பொங்கிய இளையராஜா!
இசையமைப்பாளர் இளையராஜா இதுவரை பல படங்களுக்கு இசையமைத்து இருக்கிறார். இன்னுமே படங்களிலுக்கு இசையமைத்து கொடுத்ததும் வருகிறார். தமிழ் சினிமாவில் 1000 படங்களுக்கு மேல் இசையமைத்த ஒரே இசையமைப்பாளர் என்ற சாதனையையும் அவர் வைத்து இருக்கிறார். இதுவரை பல ஹிட் பாடல்களை கொடுத்து முன்னணி இசையமைப்பாளராக இருக்கும் இவருடன் பணியாற்றிய பிரபலங்கள் பலரும் இளையராஜாவுடன் பணியாற்றியது குறித்து பேசுவது உண்டு.
அந்த வகையில், இளையராஜாவின் தீவிர ரசிகரும் இயக்குனருமான நாகராஜ் சமீபத்திய பேட்டி ஒன்றில் இளையராஜா பற்றி பேசியுள்ளார். இது குறித்து பேசிய நாகராஜ் ” எனக்கு இளையராஜா சார் தான் பிடித்த இசையமைப்பாளர். அவருடைய இசையில் தான் நான் என்னுடைய காலங்களை கழித்து இருக்கிறேன். மௌன ராகம் படத்தில் அவர் கொடுத்த பாடல்கள் மற்றும் பின்னணி இசை இன்னும் வரை என்னுடைய மனதில் இருக்கிறது.
தங்கலான் எப்போது ரிலீஸ்? மனம் திறந்த தயாரிப்பாளர்!
நான் அவருடன் ஆகாயம் என்ற படத்திற்காக இசை வாங்குவதற்காக சென்று இருந்தேன். அந்த படம் பற்றி பேசிய அடுத்த சில நிமிடங்களில் என்னுடைய கைகளில் 4 டியூன்களை அவர் கொடுத்தார். எனக்கு மிகவும் பிடித்திருந்தது. ஆனால், இடையில், எனக்கு தாலாட்ட வருவாளா? பாடலை போல ஒரு பாடல் வருமா என்று இளையராஜாவிடம் கேட்டேன்.
நான் அப்படி கேட்டவுடன் இளையராஜா முகம் மாறிவிட்டது. மாறிய பிறகு நான் வாந்தி எடுத்ததை என்ன சாப்பிட சொல்றீங்களா? என்று கேட்டுவிட்டு இசையை வாசிப்பதை நிறுத்திவிட்டு கோபப்பட்டுவிட்டார். சில மணி நேரங்கள் அவர் இசையமைக்கவே இல்லை பிறகு வேறு மாதிரி போட்டு கொடுத்தார் அதனை நான் வாங்கிக்கொண்டு சென்றேன். அந்த படம் சில காரணங்களால் தொடங்கப்படவில்லை” எனவும் நாகராஜ் தெரிவித்துள்ளார்.