ஆளுங்கட்சி எம்.எல்.ஏக்கு நிச்சயிக்கப்பட்ட பெண்ணை காணவில்லை..!! பரபரப்பில் கல்யாணவீடு..!!
பவானிசாகர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ. ஈஸ்வரனுக்கு நிச்சயிக்கப்பட்ட பெண் மூன்று நாட்களாக காணவில்லை என அவரது தந்தை ரத்தினசாமி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்துள்ளார்.
மேலும் வருகிற 12-ந்தேதி எம்.எல்.ஏ ஈஸ்வரனுக்கும், சந்தியா (வயது.23) என்கிற பெண்ணுக்கும் ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் அருகே உள்ள பண்ணாரி அம்மன் கோவிலில் திருமணம் நடக்க இருந்தது.இந்நிலையில் அப்பெண் மூன்று நாட்களாக காணவில்லை என்ற பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதனால் இருவீட்டாரும் தேடி வருவதாகவும் தெரிவித்தனர்.
DINASUVADU