நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு உடன்பாடில்லை…கட்சி தொடங்கிய மன்சூர் அலிகான்!

Mansoor Ali Khan

நடிகர்கள் கட்சி தொடங்குவதில் எனக்கு விருப்பமில்லை என்று தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின் நடிகர் மன்சூர் அலிகான் பேட்டியளித்துள்ளார்.

இந்திய ஜனநாயக புலிகள் என்ற புதிய கட்சியை தேர்தல் ஆணையத்திடம் பதிவு செய்த அவர், நாட்டில் உள்ள மதவாத, ஊழல் அரசியலை மாற்றவே கட்சி துவங்கியுள்ளேன். என்னை நான் நடிகராகவே உணரவில்லை. நடிக்க வருவதற்கு முன்பே பல போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன் என்று தனது கட்சியை தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்த பின் நடிகர் மன்சூர் அலிகான் பேசியுள்ளார்.

இது தொடர்பாக டெல்லியில் செய்தியாளர்கள் சந்தித்து பேசுகையில், ஜனநாயக நாட்டில் இது ஒரு கடமை, ரொம்ப நாளாக இது ஒரு ஆசை. முதலில் தமிழ் தேசிய புலிகள் என வைத்திருந்தேன், ஒரு தமிழனை பிரதமராக முடியவில்லை. நடிகர்கள் கட்சி ஆரம்பிப்பதில் எனக்கு உடன்பாடில்லை, என்னை நான் நடிகனாக நினைக்கவில்லை.

1991ல் எனது முதல் படம் வருது, 1987ல் மறைந்த ஆதித்தனாரை தமிழர் தலைவர் என அழைத்தற்கு ஒரு நாளிதழ் கடுமையாக விமர்சனம் எழுதியது. அப்பொது நான் நடிகனாக இருந்தேன், இதை கண்டித்து சென்னையில் நடந்த மனித சங்கிலி போராட்டத்தில் கலந்து கொண்டேன். அதன் பின்,  காவேரி போராட்டம், விளையாட்டு திடல் இல்லை என ஆளுநர் மாளிகைக்கு எதிராக கிரிக்கெட் விளையாட சென்றிருக்கிறேன்.

இவ்வாறு, பல அரசியல் போராட்டங்களில் பங்கேற்றுள்ளேன், நான் நடிப்பு தொழிலாளியாக தான் இருந்துள்ளேன். இது பற்றி சென்னை பபல்லாவரத்தில் வருகின்ற 24ஆம் தேதி மாநாடு நடத்த போகிறேன், அதில் இதை பற்றி பேசலாம்னு இருக்கேன். எங்களின் அரசியல் மக்களின் கஷ்டத்தை நீக்கும் என்றார்.

1000 திரையரங்குகளில் வெளியான ‘சைரன்’! முதல் நாள் வசூல் எவ்வளவு தெரியுமா?

நாட்டில் என்ன நடக்குதுன்னு உங்களுக்கெல்லாம் தெரியும், ஒரு முடிவோடுதான் இறங்கி இருக்கிறேன். பல்லாயிரக்கணக்கான இளைஞர்கள் கட்சியில் இணைந்துள்ளனர், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுவோம் என்று கூறினார். இறுதியாக, விஜய் போன்றவர்கள் அரசியல் வந்துருக்காங்க நீங்க அரசியல்வாதியாகஅவரோட இணைந்து செயல்படுவீர்களா என்று செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு, முதல்ல கல்யாணம் ஆகட்டும்…அப்புறம் ஃபர்ஸ்ட் நைட் பத்தி பேசலாம் என்று நகைச்சுவையாக பதிலளித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

Live Coverage 1
rahul gandhi helicopter
appam (1) (1) (1)
amaran ott release date
Actor Jayam Ravi - Aarti
A Man Died in Guindy Hospital
Mike Tyson