மேற்கு வங்க மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு பரிந்துரை

மேற்கு வங்க மாநிலத்தில் சந்தேஷ்காலி வன்முறையால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது. மேலும் ஆளும் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் பிரமுகர் ஷாஜகான் ஷேக்கிற்கு எதிராக பாலியல் புகார்கள் குவிந்து வரும் நிலையில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சிக்கு தேசிய பட்டியலின ஆணையம் அதிரடியாக பரிந்துரை செய்துள்ளது. அங்கு பல இடங்களில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையில், ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும் என ஜனாதிபதியிடம் தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையம் இந்த பரிந்துரையை மேற்கொண்டுள்ளது.

மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையில் திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இங்குள்ள சந்தேஷ்காலி பகுதியைச் சேர்ந்த ஆளுங்கட்சி நிர்வாகி ஷாஜகான் ஷேக் மற்றும் அவரின் உதவியாளர்கள் மீது ஊழல் மற்றும் பலாத்காரம் உள்ளிட்ட புகார்கள் எழுந்தன. ஷாஜகானை கைது செய்ய வலியுறுத்தி அப்பகுதியைச் சேர்ந்த பெண்கள் தொடர் போராட்டம் நடத்தி வரும் நிலையில் அவர்களுக்கு ஆதரவாக அரசியல் கட்சியினர் மற்றும் பெண்கள் அமைப்பினர் போராட்டத்தில் குதித்துள்ளனர்.

PAYTM செயல்பாடுகளை நிறுத்த காலக்கெடு நீட்டிப்பு: ரிசர்வ் வங்கி அறிவிப்பு

இதையடுத்து ஏற்பட்ட பதற்றத்தால், சந்தேஷ்காலி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டனர். மேலும், சந்தேஷ்காலி உட்பட ஏழு கிராம பஞ்சாயத்துகளில், வரும் 19ம் தேதி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் மேற்கு வங்கத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்தக்கோரி ஜனாதிபதியிடம் தேசிய பட்டியலினத்தவர்கள் ஆணையத் தலைவர் அருண் ஹல்தர் அறிக்கை தாக்கல் செய்துள்ளார். அந்த அறிக்கையில், ”மேற்கு வங்க மாநிலம் சந்தேஷ்காலி பகுதியில் தொடர்ந்து பதற்றம் நிலவி வருகிறது. பட்டியலின சமுதாய மக்களுக்கு கொடுமைகள் இழைக்கப்பட்டுள்ள நிலையில் அவர்களை காப்பாற்ற வேண்டும் என்றால் ஜனாதிபதி ஆட்சியை அமல்படுத்த வேண்டும்” என பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்