#INDvENG : 2-ம் நாள் முடிவில் 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் இங்கிலாந்து..!
இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையே 3-வது போட்டி ராஜ்கோட்டில் உள்ள சவுராஷ்டிரா கிரிக்கெட் சங்க மைதானத்தில் நேற்று முதல் நடைபெற்று வருகிறது. டாஸ் வென்ற இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்தது. இப்போட்டியில் முதலில் களமிறங்கிய இந்திய அணி 130.5 ஓவரில் தனது முதல் இன்னிங்சில் 445 ரன்கள் குவித்தனர்.
அதிகபட்சமாக இந்திய அணியில் ரோஹித் 131 ரன்களும், ஜடேஜா 121ரன்களும், சர்பராஸ் கான் 62 ரன்களும் குவித்தனர். இங்கிலாந்து அணியில் மார்க் வூட் 4 விக்கெட்டையும், ரெஹான் அகமது 2 விக்கெட்டையும், ஜேம்ஸ் ஆண்டர்சன், ஜோ ரூட், டாம் ஹார்ட்லி தலா 1 விக்கெட்களை வீழ்த்தினர்.
இதைத்தொடர்ந்து, இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ஜாக் கிராலி, பென் டக்கெட் இருவரும் களமிறங்கினர். ஆட்டம் தொடங்கியது முதல் பென் டக்கெட் அதிரடியாக விளையாடி வர மறுபுறம் விளையாடிய ஜாக் கிராலி வெறும் 15 ரன்னில் விக்கெட்டை பறிகொடுத்தார். அடுத்து வந்த ஒல்லி போப் நிதானமாக விளையாட பென் டக்கெட் இந்திய வீரர்களின் பந்துகளை நாலாபுறமும் பறக்கவிட்டார்.
#INDvENG : முதல் இன்னிங்ஸில் 445 ரன்கள் குவித்த இந்தியா..!
இவரின் விக்கெட்டை பறிக்க முடியாமல் இந்திய அணி திணறியது. இருப்பினும் சிறப்பாக விளையாடி சதம் விளாசினார். பொறுமையாக களத்தில் விளையாடிய ஒல்லி போப் 5 பவுண்டரி , 1 சிக்ஸர் என மொத்தம் 39 ரன் எடுத்து பெவிலியன் திரும்பினார்.
இதைத்தொடர்ந்து, ஜோ ரூட் களமிறங்க அடுத்த சில நிமிடங்களில் 2-ம் நாள் ஆட்டம் முடிந்தது. இதனால் 2-ம் நாள் ஆட்ட முடிவில் இங்கிலாந்து அணி 35 ஓவரில் 2 விக்கெட்டை இழந்து 207 ரன்கள் எடுத்து 238 ரன்கள் பின்தங்கிய நிலையில் உள்ளது. இந்திய அணியில் முகமது சிராஜ் , அஸ்வின் தலா 1 விக்கெட்டை பறித்துள்ளனர்.