எல்லார் முன்னாடியும் ரசிகரை அறைந்த அஜித் குமார்! காரணம் என்ன தெரியுமா?

எல்லார் முன்னாடியும் ரசிகரை அறைந்த அஜித் குமார்! காரணம் என்ன தெரியுமா?

ajith kumar

நடிகர் அஜித்குமாருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டத்தை பற்றி சொல்லியே தெரியவேண்டாம். அவரை ரசிகர்கள் பலரும் ஆரம்ப காலகட்டத்தில் இருந்த தல என்ற செல்ல பெயரை வைத்து அழைத்து வருகிறார்கள். பிறகு தன்னை தல என்று அழைக்கவேண்டாம் என்றும் அன்புடன் AK என்று அழைத்தாள் போதும் என தெரிவித்து அறிக்கையும் வெளியீட்டு இருந்தார்.

இந்நிலையில், ரசிகர் ஒருவர் தனது தலையில் தல என்று எழுதி முடி வெட்டி இருந்ததை பார்த்துவிட்டு அவரை அஜித் கூப்பிட்டு கன்னத்தில் அறைந்த சம்பவத்தை சக நடிகையான ஆர்த்தி சமீபத்திய பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய ஆர்த்தி ” ஒரு முறை ஒரு படத்தில் நான் அஜித் சாருடன் நடித்து கொண்டிருந்தேன்.

18 வருட நட்பு…உங்களை மிஸ் பண்ணுவேன்..நடிகை சார்மி கவுர் கண்ணீர்!!

அந்த படத்தின் படப்பிடிப்பின் போது நடிகர் அஜித்தை பார்க்கவேண்டும் என பல ரசிகர்கள் வெளியே கூடினார்கள். அப்போது ரசிகர் ஒருவர் தனது தலை முடியில் தல என எழுதி கொண்டு அஜித் சாரை பார்த்து தனது தலையில் தல என்று எழுதி இருப்பதை காமித்தார். பிறகு கேரவனுக்கு சென்ற பின் அந்த ரசிகரை அஜித் சார் அழைத்தார்.

அஜித் சார் அழைத்தவுடன் அந்த ரசிகர் வேகமாக ஓடி வந்தார்.  ஓடி வந்த பிறகு அந்த ரசிகர்களை கன்னத்தில் பளீர் என்று அறைந்தார். அறைந்துவிட்டு பணம் எடுத்து போய் மொட்டை அடித்துவிட்டு வா என்று கூறினார். அந்த ரசிகருக்கு ஒண்ணுமே புரியவில்லை. பின் அஜித்தின் உதவியாளர் அந்த ரசிகர்கரை அழைத்து சென்று மொட்டை போட்டு கூப்பிட்டு வந்தார்.

அதன்பிறகு அந்த ரசிகரை அமர வைத்து அவரிடம் நீ எப்போது என் மீது பாசமாக இருக்கலாம் ஆனால், அதனை மனதிற்குள் வைத்துக்கொள்ள இப்படியெல்லாம் செய்யவேண்டாம். இப்படியெல்லாம் செய்தால் உங்களுடைய வீட்டில் யாருக்காவது பிடிக்குமா? அம்மா அப்பாக்கு பிடித்த படி இருங்கள். அன்பு மனதில் இருந்தால் போதும் என அந்த ரசிகருக்கு அஜித் அட்வைஸ் கொடுத்து அனுப்பினார்” எனவும் ஆர்த்தி தெரிவித்துள்ளார். இந்த தகவலை பார்த்த அஜித் ரசிகர்கள் இது தாங்க அஜித் என புகழ்ந்து பேசி வருகிறார்கள்.

Join our channel google news Youtube

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *