நாளை தனியாக ரிலீஸாகும் ஜெயம் ரவியின் சைரன்.! நீங்க எத பார்க்க போறீங்க?

siren

வாரம்தோரும் வெள்ளிக்கிழமை திரையரங்கு மற்றும் ஓடிடி-யில் தமிழ் திரைப்படங்கள் வெளியாவது வழக்கம். அந்த வகையில், இந்த வார வெள்ளிக்கிழமை நாளை (பிப்ரவரி 16ஆம் தேதி) தமிழ் சினிமாவில் நடிகர் ஜெயம் ரவி நடித்த ‘சைரன்’ திரைப்படம் தனியாக களமிறங்குகிறது.

இன்றைய தினம் மலையாள நடிகர் மம்முட்டி நடித்த ‘பிரம்மயுகம்’ திரைப்படம் இன்று திரையரங்கில் வெளியானது. மேலும், நாளை சந்தீப் கிஷன் நடித்துள்ள  ‘Ooru Peru Bhairavakona’ என்ற தெலுங்கு திரைப்படம் வெளியாகிறது. இவற்றை தவிர மார்வல் திரைப்படமான ‘மேடம் வெப்’ என்ற ஹாலிவுட் படமம் நாளை வெளியாகிறது.

சைரன்

இயக்குனர் ஆண்டனி பாக்யராஜ் இயக்கியுள்ள ‘சைரன்’ படத்தில் நடிகர் ஜெயம்ரவிக்கு ஜோடியாக நடிகை அனுபமா நடித்திருக்கிறார். மேலும், கீர்த்தி சுரேஷ், யோகி பாபு, சமுத்திரக்கனி, கௌஷிக் மஹதா உள்ளிட்ட பல பிரபலங்களும் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் ஜிவி பிரகாஷ் இசையமைத்துள்ளார்.  படத்தில் கீர்த்தி சுரேஷும் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்து இருந்தாலும், ஜெயம் ரவிக்கு ஜோடியாக அனுபமா தான் நடித்து இருக்கிறார். அது என்ன கதை என்று படம் பார்த்த பிறகே புரியவரும். அதாவது, ஜெயம் ரவி கைதியாக நடிக்க ​​கீர்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கிறார்.

வெற்றிமாறன் இல்லை! ‘தளபதி 69’ இயக்குனர் இவரா? வெளியான லேட்டஸ்ட் தகவல்!

ஓடிடி ரிலீஸ்

காதலர் தினத்தை முன்னிட்டு, நடிகர் ஷாருக்கான் நடித்த ‘டன்கி’ திரைப்படம் நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ளது. அதுபோல், அசோக் செல்வன் நடித்துள்ள ‘சபாநாயகன்’ திரைப்படம் நேற்று டிஸ்னி+ ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது. இந்நிலையில், இந்த வார வீக்கெண்டை மேலே குறிப்பிட்ட படங்களில் ஏதேனும் கண்டு மகிழுங்கள்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்