பாக்ஸ் ஆபிஸில் சுருண்ட லால் சலாம் – லவ்வர்? வசூல் நிலவரம் இதோ.!

lal salaam - lover

ரஜினி கேமியா ரோலில் நடித்த லால் சலாம் திரைப்படமும் மணிகண்டனின் லவ்வர் திரைப்படமும் கடந்த வாரம் வெள்ளிக்கிழமை வெளியானது. காதலர் தினத்தை முன்னிட்டு  இந்த இரண்டு படங்களும் பாக்ஸ் ஆபிஸில் மோதின. இதில், இரண்டு படங்களும் முதல் நாளில் நல்ல  விமர்சனங்களை பெற்று வசூல் செய்திருந்தாலும், இரண்டாம் நாளில் இருந்து வசூல் குறைய தொடங்கியது.

லால் சலாம்

இயக்குனர் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் வெளியான அந்த திரைப்படத்தில் ரஜினிகாந்தும் முக்கியமான கதாபத்திரத்தில் நடித்திருந்தார். மேலும், இந்த படத்தில் நடிகர்கள் விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்த திரைப்படத்தினை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது. படத்திற்கு இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்துள்ளார். விளையாட்டை மையமாக வைத்து எடுக்கப்பட்டிருந்த இப்படத்தின் 6 நாட்கள் மொத்த வசூல் ரூ.14.55 கோடியாக உள்ளது.

4வது நாளின் ‘லவ்வர்’ பட பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம்.!

அதன்படி, முதல் நாளில் ரூ.3.55 கோடி எனவும் இரண்டாம் நாளில் ரூ.3.25 எனவும் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமையும் ரூ.3.15 எனவும், 4வது நாள்நாளான திங்கட்கிழமை ரூ.1.24 மாற்றம் ஐந்தாம் நாளில் ரூ.1.16 கோடியும் ஆறாம் நாளான நேற்று ரூ.39 லட்சம் என மொத்தம் ரூ.14.55 கோடியை வசூலித்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

லவ்வர்

அறிமுக இயக்குனர் பிரபு ராம் வியாஸ் இயக்கிய ‘லவ்வர்’ திரைப்படத்தில் நடிகர் மணிகண்டனுக்கு ஜோடியாக கௌரி பிரியா ரெட்டி மற்றும் கண்ணா ரவி ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். குட் நைட் படத்தை ஆதரித்த மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து லவ்வர் படத்தையும் தயாரித்துள்ளனர்.

இந்த திரைப்படத்திற்கு இசையமைப்பாளர் சீன் ரோல்டன் இசையமைத்துள்ளார். டாக்சிக் காதலில் என்னவெல்லாம் நடக்கிறது என்பதை இந்தப் படம் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. லவ்வர் படத்தின் 6 நாட்கள் மொத்த வசூல் ரூ.4.09 கோடியாக உள்ளது.

‘லால் சலாம்’ படத்தின் 5ம் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல்.!

அதன்படி, முதல் நாளில் ரூ.70 லட்சம் எனவும் இரண்டாம் நாளில் ரூ.1.1 கோடி எனவும் மூன்றாம் நாளான ஞாயிற்றுக்கிழமையும் ரூ.99 லட்சம் எனவும், 4வது நாள்நாளான திங்கட்கிழமை ரூ.36 லட்சம் எனவும் ஐந்தாம் நாளில் ரூ.37 லட்சம் மற்றும் ஆறாம் நாளான நேற்று ரூ.57 லட்சம் என மொத்தம் ரூ.4.24 கோடியை கடந்திருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

    Get the latest news


    Leave a Reply

    லேட்டஸ்ட் செய்திகள்