அபுதாபியில் முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார் பிரதமர் மோடி..!

PM Modi in Akshar Purushottam Swaminarayan Sanstha (BAPS) Mandir

இரண்டு நாள் பயணமாக ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வந்துள்ள பிரதமர் மோடி அபுதாபியில் புதியதாக பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள இந்து கோவிலை திறப்பது, துபாயில் நடைபெற்ற உலக உச்சி மாநாட்டில் உலக தலைவர்கள் மத்தியில் உரையாற்றுவது உள்ளிட்ட நிகழ்வுகளில் கலந்துகொண்டு வருகிறார்.முன்னதாக நேற்று இரவு அஹ்லான் மோடி எனும் நிகழ்வில் துபாய் வாழ் இந்தியர்கள் மத்தியில் பேசினார்.

அயோத்தியில் பிரம்மாண்டமாகக் கட்டப்பட்டுள்ள ராமர் கோயில் திறப்பு விழா கடந்த ஜனவரி மாதம் 22-ம் தேதி நடைபெற்றது. அயோத்தி ராமர் கோயில் திறப்பு விழாவுக்குப் பிறகு இன்று (பிப்ரவரி 14) பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் தலைநகர் அபுதாபியில் கட்டப்பட்டுள்ள முதல் இந்து கோவிலை திறந்து வைத்தார். இந்த கோவில் துபாய்-அபுதாபி ஷேக் சயீத் நெடுஞ்சாலையில் அல் ரஹ்பாவிற்கு அருகில் கட்டப்பட்டுள்ளது.

எங்கள் அரசு மீது மக்கள் நம்பிக்கை அதிகரிப்பு… துபாயில் பிரதமர் மோடி பேச்சு!

இந்த கோவில் சுமார் 27 ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோயிலின் கட்டடப் பணிகள்  கடந்த 2019-ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது. இந்த கோவிலுக்கான நிலத்தை ஐக்கிய அரபு அமீரக அரசு நன்கொடையாக வழங்கியது. இந்த கோவில் இந்திய மதிப்பீட்டில் சுமார் ரூ. 700 கோடி செலவில் கட்டப்பட்டுள்ளது. இந்த கோயில் வேலைப்பாடுகளுக்காக ராஜஸ்தானில் இறந்து கற்கள் இறக்குமதி செய்யப்பட்டு சிற்ப வேலைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதே முறைப்படி தான் அயோத்தியில் ராமர் கோயில் கட்டப்பட்டுள்ளது. கோவிலின் ஒவ்வொரு தூணிலும் ஹனுமான், ராமன் மற்றும் சீதா ஆகியோரின் சிலைகள் பளிங்குக் கல்லால் உள்ளது. இந்த கோவிலில் வெப்பநிலையை அளவிடவும், நில அதிர்வு கண்காணிக்கவும் 300-க்கும் மேற்பட்ட உயர் தொழில்நுட்ப சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த போச்சாசன்வாசி ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தா (BAPS) இந்து கோவிலை பிரதமர் மோடி தற்போது திறந்து வைத்து சிறப்பு பூஜைகள் செய்தார். அதன் பிறகு ஸ்ரீ அக்ஷர் புருஷோத்தம் சுவாமிநாராயண் சன்ஸ்தாவில் சிறப்பு பிரார்த்தனை மேற்கொண்டார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்

MK Stalin - AUS vs IND
muthu ,meena (4) (1)
Suburban Railway - MTC Chennai
SPVelumani
Seeman - Rajini
goat vijay sk rajinikanth