லோக்சபா தேர்தலில் நான் போட்டியிடவில்லை – அண்ணாமலை
தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருப்பதால் வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் நான் போட்டியிடவில்லை என பாஜக மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார். இன்று கோவையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய அண்ணாமலை, மீண்டும் மத்திய பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் மத்திய இணையமைச்சரும், முன்னாள் மாநில பாஜக தலைவருமான எல்.முருகனுக்கு வாழ்த்துக்கள் தெரிவித்தார்.
இதன்பின் தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் ஸ்டாலின் கொண்டுவரப்பட்ட ஒரே நாடு ஒரே தேர்தல் முறையை நடைமுறைப்படுத்த கூடாது என்றும், மக்கள் தொகை அடிப்படையில் நாடாளுமன்ற தொகுதிகளில் மறுவரையறை செய்யும் நடவடிக்கையை கைவிடக் கோரியும் 2 தனி தீர்மானங்கள் குறித்து பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது, ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம். இந்தியாவை பொறுத்தவரை அடிப்படையில் முதல் 20 ஆண்டுகளில் ஒரே தேர்தலில் தான் இருந்தோம். அதன்பிறகு காங்கிரஸ் கட்சி 356-ஐ பயனப்படுத்ததியதால் தேர்தலில் சூழ்நிலையும், காலகட்டமும் மாறியது. தற்போது ஒரு வருடத்தில் சராசரியாக 5 லிருந்து 7 தேர்தலை சந்தித்து வருகிறோம். 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை சட்டமன்ற தேர்தல், நாடாளுமன்ற தேர்தலை பார்க்கிறோம். தேர்தல் மாறி மாறி வருவதால் ஆட்சி இயந்திரம் சரிவர செயல்பட முடியவில்லை.
முதல்வர் மு.க.ஸ்டாலின் கொண்டு வந்த 2 தனி தீர்மானங்கள் நிறைவேற்றம்.!
இதனால் ஒரே நாடு ஒரே தேர்தல் என்பது காலத்தின் கட்டாயம். இதனை கலைஞர் கருணாநிதி கூட அவரது நெஞ்சிக்கு நீதி புத்தகத்தில் குறிப்பிட்டு ஆதரவு தெரிவித்திருந்தார் எனவும் குறிப்பிட்டார். இதையடுத்து பேசிய அண்ணாமலை, மறுசீரமைப்பால் தொகுதிகள் எண்ணிக்கை குறையாது. மக்கள் தொகை மட்டுமே ஒரு கணக்கிட்டாக இருக்க கூடாது என்பது தமிழக பாஜகவின் கருத்து. மக்களின் எண்ணிக்கை அடிப்படையில் நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் எனவும் கூறினார்.
இதனைத்தொடர்ந்து, செய்தியாளர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்து பேசிய அண்ணாமலை, வரும் நாடாளுமன்ற மக்களவை தேர்தலில் போட்டியிடவில்லை, கோவை தொகுதியில் போட்டியிடமாட்டேன். எனக்கு தலைவராக பணிகளை செய்யவே நேரம் சரியாக இருப்பதால் தேர்தலில் போட்டியிட நேரமில்லை என்றார்.