டி20யில் 500 விக்கெட்டை கடந்த பராசக்தி எக்ஸ்பிரஸ்..!

தென் ஆப்பிரிக்காவின் முன்னாள் வலது கை சூழல் பந்து வீச்சாளரான இம்ரான் தாஹிர் தற்போது டி20களில் மட்டும் 500 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்திருக்கிறார். டுவைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரேனை தொடர்ந்து இம்ரான் தாஹிரும் இந்த பட்டியலில் நான்காவதாக இணைந்துள்ளார்.

இம்ரான் தாஹிர் தற்போது பங்ளாதேஸ் பிரீமியர் லீக் (BBL) இல் ரங்பூர் ரைடர்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். நேற்று நடந்த போட்டியின் போது ரங்பூர் ரைடர்ஸ் அணியை எதிர்த்து குல்னா டைகர்ஸ் அணி விளையாடியது. அதில் முதலில் பேட் செய்த ரங்பூர் ரைடர்ஸ் அணி 219 ரன்கள் எடுத்திருந்தது.

டி20-யிலும் ஓய்வை அறிவிக்க உள்ள டேவிட் வார்னர்..! எப்போது தெரியுமா..?

அதன் பின் குல்னா டைகர்ஸ் அணி களமிறங்கியது. அப்போது நன்றாக விளையாடி கொண்டிருந்த தொடக்க வீரர் அலெக்ஸ் ஹேல்ஸ் உட்பட தொடர்ந்து களமிறங்கிய 5 பேட்ஸ்மேன்களையும் இம்ரான் தாஹிர் காலி செய்து பெவிலியன் அனுப்பினார். இதன் மூலம் குல்னா டைகர்ஸ் அணி  78 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இம்ரான் தாஹிர் வீழ்த்திய 5 விக்கெட் மூலம் குல்னா டைகர்ஸ் அணி வெற்றிக்கு வித்திட்டார்.

அந்த போட்டியில் இம்ரான் தாஹிர் 4 ஓவர் வீசி 26 ரன்கள் கொடுத்து 5 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதன் மூலம் டி20 போட்டிகளில் 500 விக்கெட்டுகளை வீழ்த்தி புதிய சாதனை படைத்துள்ளார். இவர் ஒட்டு மொத்தமாக  404 டி20 போட்டிகளில் விளையாடி 502 விக்கெட்டுகளை வீழ்த்தி உள்ளார். இதில் நான்கு முறை 5 விக்கெட் எடுத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

500 விக்கெட்டை வீழ்த்தி சாதனை படைத்துள்ள வீரர்களின் பட்டியலில் இம்ரான் தாஹிரும் இணைந்துள்ளார். இந்த பட்டியலில் டுவைன் பிராவோ, ரஷீத் கான், சுனில் நரேனை தொடர்ந்து இம்ரான் தாஹிர்  நான்காவதாக உள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்