கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் : கலைஞர் பெயர் வைத்தது தான் ஒரே காரணம்.! சேகர்பாபு பரபரப்பு…

Kalaignar Bus Terminus - Minister Sekar babu

சென்னையில் பேருந்து போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு சென்னை புறநகர் பகுதியில் கிளாம்பாக்கத்தில் புதிய பேருந்து நிலையம் திறக்கப்பட்டது. இதற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த பேருந்து நிலையத்தில் பேருந்துகள் வர தாமதமாவதால் பயணிகள் அவதிக்கு உள்ளாவதாக எதிர்க்கட்சிகள் தொடர்ந்து குற்றசாட்டை முன்வைத்து வருகின்றனர்.

இன்றைய சட்டப்பேரவை கூட்டத்தொடரில் எதிர்க்கட்சி உறுப்பினர்கள் கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் குறித்து குற்றசாட்டுகளை முன்வைத்தனர். அந்த கேள்விக்கு அமைச்சர் சேகர் பாபு விரிவான விளக்கத்தை அளித்தார். அப்போது அவர் கூறுகையில்,  கோயம்பேடு பேருந்து நிலையம் 33 ஏக்கர் பரப்பளவு கொண்டது. கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் 86 ஏக்கர் பரப்பளவு கொண்டது.

எதிர்க்கட்சி துணை தலைவர் இருக்கை.. நடவடிக்கை எடுக்க முதல்வர் கோரிக்கை.! 

கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் முறையான திட்டமிடல் இன்றி செயல்பாட்டை தொடங்கியது. அதில் 100 கோடி ரூபாய் அளவுக்கு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி தற்போது பேருந்து நிலையத்தை திறந்து உள்ளோம். 2002ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட சமயத்தில், ஆம்னி பேருந்துகள், பாரிமுனை, சென்ட்ரல், உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தான் இயக்கப்பட்டது. 2009 ஆம் ஆண்டு அதாவது சுமார் 7 வருடம் கழித்து தான் ஆம்னி பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்பட்டது.

ஆனால், கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் திறந்து 45 நாட்களில் தினசரி 2400 பேருந்துகள் இயக்கப்படுகிறது. தினசரி சுமார் ஒரு லட்சம் பயணிகள் பயணித்து வருகின்றனர். 2002ஆம் ஆண்டு கோயம்பேடு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட சமயத்தில் ஓய்வு அறைகள் இல்லை. வாகன ஓட்டுனர்கள், நடத்துனர்கள் பேருந்துக்கு அடியில் தூங்கும் நிலைமை தான் இருந்தது.

ஆனால், தற்போது கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஓட்டுநர்கள் நடத்துனர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் ஓய்வு எடுக்க மூன்று இடங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மருத்துவமனைகள், கழிப்பறை வசதி,  காவல் நிலையம் ஆகியவை உள்ளது. 47 கடைகள் செயல்பாட்டில் உள்ளது. 1700 மீட்டர் அளவில் மழை நீர் வடிகால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. 6 கோடி ரூபாய் செலவில் நுழைவு வாயில் அமைக்கப்பட்டுள்ளது.

60 கோடி ரூபாய் செலவில் நடைமேடை அமைக்க டெண்டர் கோரப்பட்டுள்ளது. 20 கோடி ரூபாய் செலவீட்டில் ரயில் நிலையம் அமைக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மெட்ரோ அமைக்கவும் தற்போது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதுவரையில் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் கழிப்பறை இல்லை. குடிநீர் வசதி இல்லை. உணவு வசதி இல்லை என்று யாரும் புகார் கூறவில்லை. நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 4 மணிக்குள் பேருந்து குறைவாக இருக்கிறது என்பது மட்டுமே தற்போது குறையாக இருக்கிறது/. அதனை மட்டும் குறிப்பிட்டு சில ஊடகங்கள் தவறாக திட்டமிட்டு செய்திகளை பரப்புகின்றனர்.

மாற்றுத்திறனாளிகள் பயன்பெறும் வகையில் 200 மீட்டர் தூர அளவிற்கு பேட்டரி வாகனம் இயக்கப்பட்டு வருகிறது. மின் தூக்கி வசதி உள்ளது. ஆசிய கண்டத்திலேயே சிறப்பு வாய்ந்த பேருந்து நிலையம் கிளாம்பாக்கம் பேருந்து நிலையமாக உள்ளது. திருச்சி விமான நிலையத்தை பிரதமர் மோடி திறந்து வைத்தார். ஆனால் தற்போது வரை அங்கு விமான நிலையம் முழுதாக செயல்படவில்லை. ஆனால், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் தற்போது செயல்பாட்டில் உள்ளது.

இவ்வளவு சிறப்பு வாய்ந்த பேருந்து நிலையத்தில் குறை சொல்வதற்கு காரணம் ஒன்றே ஒன்றுதான். அது பேருந்து நிலையத்திற்கு கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் என பெயர் வைத்த ஒரே காரணத்தால் அதில் இல்லாத குறைகளை எதிர்க்கட்சியினர் கூறி வருகின்றனர் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்தார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்