ஐக்கிய அரபு எமிரேட்ஸ் புறப்பட்ட பிரதமர் நரேந்திர மோடி..!

PM Modi UAE visit

2 நாள் அரசுமுறை பயணமாக இன்று பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு அமீரகம் செல்கிறார். டெல்லியில் இருந்து 11:30 மணிக்கு புறப்பட்டு மதியம் 2:30 மணிக்கு அபுதாபிக்கு பிரதமர் சென்றடைகிறார். இதைத்தொடர்ந்து, இன்று மாலை (அதாவது பிப்ரவரி 13 ஆம் தேதி) அபுதாபியில் உள்ள சயீத் ஸ்போர்ட்ஸ் சிட்டி ஸ்டேடியத்தில் இந்திர்கள் மத்தியில் உரையாற்ற உள்ளார். அவரது நிகழ்ச்சிக்கு அஹ்லன் மோடி என்று பெயரிடப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நள்ளிரவு முதல் கனமழை பெய்து வருவதால், பல இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. பிரதமர் மோடி கலந்துகொள்ளும் நிகழ்ச்சியில் 65,000 பேர் கலந்து கொள்ளவிருந்த நிலையில், தற்போது அந்த எண்ணிக்கை 20 ஆயிரமாக குறைந்துள்ளது. ஐக்கிய அரபு அமீரகம் செல்லும் பிரதமர் மோடி நாளை மாலை அபுதாபியில் 27 ஏக்கர் பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட கோவில் மற்றும் அதன் வளாகத்தை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

உச்சகட்ட பதற்றத்தில் டெல்லி… விவசாயிகள் மீது கண்ணீர் புகைக் குண்டுகள் வீச்சு!

பிரதமர் நரேந்திர மோடி கடந்த 2015-ஆம் ஆண்டு அபுதாபி சென்றபோது பட்டத்து இளவரசர் ஷேக் முகமது பின் சயீத் அல் நஹ்யான் அபுதாபியில் கோயில் கட்ட 13.5 ஏக்கர் நிலத்தை கொடுத்தார். பின்னர் கடந்த 2019-ஆம் ஆண்டு கூடுதலாக 13.5 நிலத்தை அரபு எமிரேட்ஸ் அரசு கொடுத்தது. இதனையடுத்து 27 ஏக்கர் நிலத்தில் சுவாமி நராயண் கோயில் கட்ட நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.

கடந்த 2015-ஆம் ஆண்டு முதல் பிரதமர் மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் மேற்கொள்ளும் ஏழாவது பயணம் இதுவாகும். கடந்த 8 மாதங்களில் பிரதமர் மோடி மூன்றாவது முறையாக ஐக்கிய அரபு எமிரேட்ஸில் பயணம் மேற்கொள்கிறார். இந்த  இரண்டு நாட்களில், ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மற்றும் கத்தார் நாடுகளுடன் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்தும் பல்வேறு நிகழ்ச்சிகளில் பிரதமர் கலந்துகொள்கிறார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்