செப்டம்பர் 5 ஆம் தேதி…!கருணாநிதியின் உண்மை தொண்டர்கள் 100000 பேர் இதை கண்டிப்பாக செய்ய வேண்டும் …!மு.க.அழகிரி அதிரடி அறிக்கை

Default Image

செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள பேரணி குறித்து மு.க.அழகிரி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

திமுகவின் முன்னால் தலைவராக இருந்து மறைந்த கருணாநிதி அவர்களின் மரணத்திற்கு பிறகு முக.அழகிரியா , ஸ்டாலினா என்ற ஒரு எதிர்பார்ப்பு வந்தது.ஆனால் முக.ஸ்டாலின் தான் அவருடைய ஆளுமையை உயர்த்தி திமுக தலைவராக பதவியேற்றார்.

ஆனால் முக.அழகிரி என்னிடம் தான் திமுக தொண்டர்கள் உள்ளனர், என் கவலை எல்லாம் கட்சியை பற்றியதுதான் என்று முக.ஸ்டாலினுக்கு எதிராக செயல்பட ஆரம்பித்தார்.அது மட்டும் இல்லாமல் வருகின்ற செப்டம்பர் 5ம் தேதி நடக்க உள்ள, பேரணி நடத்துவதில் நம்முடைய பலத்தை கட்ட வேண்டும் என்றும் அவருடைய ஆதரவாளர்களை வைத்து தீட்டிமிட்டு வந்தார்.

Related image

ஆனால் முக.ஸ்டாலின் திமுக தலைவரானதும் ஒட்டு மொத்த திமுக தொண்டர்களும் ஸ்டாலின் ஆதரவாளர்களாக இருக்கின்றனர்.நம்முடைய பலம் வெகுவாக குறைந்துள்ளது என்பதை உணர்ந்த முக.அழகிரி பின்னர் என்னையும் திமுகவில் சேர்த்துக் கொண்டால் ஸ்டாலினை தலைவராக ஏற்றுக்கொள்ள தயார் என்று கூறினார்.

மேலும் கட்சியில் என் மகனுக்கு எந்த விதமான பதவியும் கேட்கவில்லை.தொண்டர்கள் என் பக்கமே இருக்கிறார்கள். கருணாநிதியின் உண்மையான விசுவாசிகள் என் பக்கமே உள்ளனர். பலர் என்னை தொடர்பு கொண்டு பேசி வருகிறார்கள்.கட்சியில் எல்லோருடனும் இணைந்து பணியாற்ற தயார். எல்லோருடனும் பயணிக்க தயாராக உள்ளேன். அவர்கள்தான் இதுகுறித்து முடிவெடுக்க வேண்டும், என்று அழகிரி கூறினார் .

Image result for அழகிரி

மீண்டும்  மதுரையில் தனது ஆதரவாளர்களுடனான ஆலோசனைக்கு பிறகு மு.க.அழகிரி மீண்டும் கருத்து ஒன்றை கூறினார் .அவர் கூறுகையில்,நான் கருணாநிதியின் மகன், சொன்னதை செய்வேன் .மேலும்
சென்னையில் நடைபெறும் அமைதிப் பேரணியில் ஒரு லட்சம் பேர்க்கு மேல் வருவார்கள் என்றும் உறுதியுடன் கூறினார்.

இந்நிலையில் செப்டம்பர் 5 ஆம் தேதி நடைபெற உள்ள பேரணி குறித்து மு.க.அழகிரி  அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

மு.க.அழகிரி அறிக்கை :

எனது தலைமையில் தலைவர் கருணாநிதியின் 30 -ம் நாள் நினைவு நாளை முன்னிட்டு  மாபெரும் அமைதிப் பேரணி செப்டம்பர்  5 ஆம் தேதி காலை 10 மணியளவில் சென்னை அண்ணா சிலை அருகே உள்ள திருவல்லிக்கேணி காவல் நிலையம் அருகில் இருந்து புறப்பட்டு கருணாநிதி நினைவிடத்தில் அஞ்சலி செலுத்த உள்ளோம்.

அழகிரி

இந்நிலையில் இதில் கலந்துகொள்ள வரும்  உடன்பிறப்புகள் காலை 10 மணிக்கு அண்ணாசிலை அருகே திரண்டிட வேண்டுகிறேன்.  அமைதிப் பேரணியில் எவ்வித ஆரவார, ஆர்ப்பாட்டத்திற்கும் இடம் கொடுக்காமல் காவல்துறையினருக்கும் பொதுமக்களுக்கும் எவ்வித இடையூறு தராமலும், நடந்து கொள்ள வேண்டும். சென்னை மாநகருக்குள்  காலை 8 மணிக்குள் வந்து சேரும் வகையில் பயணத்தை மேற்கொள்ள வேண்டும். பேரணியில் கலந்துகொள்ள வரும் போதும், திரும்பிச் செல்லும் போதும் மிகவும் கவனமாகவும் எச்சரிக்கையுடனும் பயணம் மேற்கொள்ளப் பாசத்துடன் வேண்டுகிறேன்”  என தனது அறிக்கையில் மு.க.அழகிரி  தெரிவித்துள்ளார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்