இதெல்லாம் போலி நம்பாதீர்கள்.. CBSE வெளியிட்ட விழிப்புணர்வு தகவல்.!
பல்வேறு சமூக வலைத்தளங்களில் செயல்படும் போலி கணக்குகளால் ஒரிஜினல் கணக்காளர்கள் மற்றும் அவர்களை பின்தொடரும் சமூக வலைதளவாசிகள் பெரும் சிக்கலை எதிர்கொண்டு வருகின்றனர். இத போலி கணக்குகள் மூலம் பல்வேறு சமயம் போலியான தகவல் பரப்பப்பட்டு அதனால் உரிய கணக்காளர்கள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாகும் நிலை ஏற்படுகிறது. இதனை தடுக்க தனிப்பட்ட முறையிலும், அரசும் பல்வேறு விழிப்புணர்வு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
தற்போது, மத்திய இடைநிலைக் கல்வி வாரியமான CBSE கல்வி வாரியம் தங்கள் பெயரில் X (டிவிட்டர்) சமுக வலைத்தளத்தில் செயல்ப்பட்டு வரும் சுமார் 30 போலி X சமூக வலைதள கணக்குகளை வெளியிட்டு உள்ளது. இந்த போலி கணக்குகள் மூலம் தவறான தகவல்கள் புறப்பட்டு வருவதாகவும் தங்கள் அதிகாரபூர்வ X சமூக வலைதள பக்கம் இதுதான் என்றும் குறிப்பிட்டுள்ளது.
தங்கள் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கான @cbseindia29 எனும் X சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டபடி, போலி X கணக்குகள் விவரங்கள்…
- @Cbse_official
- @CBSEWorld
- @cbse_news
- @CbseExam
- @CBSENewsAlert
- @cbse_nic_in
- @cbse_result
- @CBSEINDIA
- @cbsezone
- @cbse_updates
உள்ளிட்ட 30 X சமூக வலைதள பக்கங்களை சிபிஎஸ்இ வாரியம் தனது அதிகாரபூர்வ X சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது.
போலியான கணக்குகளை பயனர்கள் பின்தொடர்ந்து ஏமாற வேண்டாம் என சிபிஎஸ்இ வலியுறுத்தி உள்ளது. அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் CBSE தொடர்பான விஷயங்கள், நம்பகமான தகவல்கள் ஆகியவை சரிபார்க்கப்பட்ட மற்றும் உண்மையான பக்கமான @cbseindia29 தளத்தில் மட்டுமே வெளியிடப்படும் என்பதால் அதனை பின்பற்றுமாறு வாரியம் தனிநபர்களுக்கு அறிவுறுத்தியுள்ளது.
10 மற்றும் 12 ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வுகள் நடைபெற உள்ள சமயத்தில் பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டியது அவசியம் என எடுத்துக்காட்டுகிறது. தவறான தகவல்கள் தொடர்ந்து பரவி வருவதால், இந்த செய்தி முக்கியத்துவம் வாய்ந்ததாக அறியப்படுகிறது.