வேங்கைவயல் விவகாரம் : சிபிசிஐடி மனுவை தள்ளுபடி செய்தது நீதிமன்றம்..!
கடந்த 2022ஆம் ஆண்டு டிசம்பர் 26-ம் தேதி அன்று, புதுக்கோட்டை மாவட்டம் இறையூர் வேங்கைவயல் கிராமத்தில் பட்டியலின சமூக மக்கள் பயன்படுத்தும் மேல்நிலை நீர்தேக்க தொட்டியில் மனித கழிவு கலக்கபட்டது. இது நாடு முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதை எதிர்த்து பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆர்ப்பாட்டம் நடத்தியது.
வடசென்னை.! உங்கள் தொகுதி.. உங்கள் பார்வைக்கு….!
இந்த வழக்கை விசாரிக்க காவல்துறையில் சிறப்பு புலனாய்வுக்குழு அமைக்கப்பட்டது. அதன் பின்னர் 2023 ஆண்டு சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு வழக்கு மாற்றப்பட்டது. இதுவரை மொத்தமாக 147 பேரிடம் விசாரணை செய்தும், பல்வேறு நபர்களிடம் டிஎன்ஏ மாதிரி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
கடந்த 394 நாட்களாக நாடத்தப்பட்டு வந்த இந்த் விசாரணையில் இதுவரை யாரும் கைது செய்யபடவில்லை. இதனால் ஒரு கட்டத்திற்குமேல் விசாரணையை மாற்ற வேண்டும் என்று சி.பி.சி.ஐ.டி. கோரிக்கை வைத்தனர். இதை தொடர்ந்து பலருக்கு டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்டது. உண்மை குற்றவாளிகளை அப்பொழுதும் புடிக்க முடியாமால் இருந்துது.
இறுதியாக சிபிசிஐடி போலீசார் உண்மைக் கண்டறியும் பரிசோதனையை நடத்த திட்டமிட்டனர். அதற்கு அனுமதி பெற புதுக்கோட்டை வன்கொடுமை தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில் முதலில் ஒரு 10 பேரிடம் உண்மை கண்டறியும் பரிசோதனையை நடத்த திட்டமிட்டனர். அதற்கு அனுமதி கேட்கப்பட்டது .
இதை விசாரித்து வந்த விசாரணை அதிகாரி திருச்சி சிபிசிஐடி டி.எஸ்.பி. பால்பாண்டி தற்போது மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக புதிய அதிகாரியாக தஞ்சாவூர் சிபிசிஐடி டி.எஸ்.பி. கல்பனா தத் நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தனது உத்தரவில் டி.ஜி.பி. தெரிவித்துள்ளார்.
ஆனால், அந்த 10 பேர் தரப்பினர்களும் எதிர்ப்பு தெரிவித்ததால். சிபிசிஐடி போலீசாரின் உண்மையைக் கண்டறியும் சோதனை தொடர்பான வழக்கை புதுக்கோட்டை நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது. ஒரு வருடத்திற்கும் மேலாக நடந்து வரும் இந்த வேங்கைவயல் விவகாரத்தில் இதுவரை உண்மை குற்றவாளிகள் யார் என கண்டறிய முடியாமல் விசாரணை நீடித்து கொண்டே வருகிறது.