ஆளுநர் ஆர்.என்.ரவி மரபுப்படி தான் நடந்து கொண்டார் – நயினார் நாகேந்திரன்

nainar nagendran

தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று கூடியது. நடப்பாண்டின் முதல் கூட்டத்தொடர் என்பதால் உரையாற்றுவதற்கு தமிழக ஆளுநருக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. அதன்படி, இன்று காலை 10 மணிக்கு தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் தொடங்கியது. முதலில் தமிழ்தாய் வாழ்த்து பாடல் இசைக்கப்பட்ட நிலையில், பின்னர் ஆளுநர் ஆர்.என். ரவி, அனைவருக்கும் வணக்கம் என தமிழில் உரையை தொடங்கினார்.

இதன்பின் ஆங்கிலத்தில் உரையாற்றிய ஆளுநர், கூட்டத்தொடரில் தேசிய கீதத்தை முதலிலும், இறுதியிலும் ஒலிபரப்ப வேண்டும் என வேண்டுகோள் விடுத்த ஆளுநர், தமிழக அரசின் உரையில் பல்வேறு விஷயங்கள் உள்ளன. ஆனால், உண்மை மற்றும் தார்மீக அடிப்படையில் இந்த உரையை வாசிக்க விரும்பவில்லை என்று கூறிவிட்டு அவரது இருக்கையில் அமர்ந்தார். இதன்பின், ஆளுநர் உரையை சபாநாயகர் அப்பாவு வாசித்தார்.

பிப்ரவரி 22-ம் தேதி வரை சட்டசபை கூட்டுத்தொடர்..!

அப்போது, சாவர்க்கர், கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள் சற்றும் குறைந்தவர்கள் அல்ல என்றார். மேலும், உரையை படிக்காமல் புறக்கணித்த ஆளுநருக்கு எதிராக சட்டபேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இந்த நிலையில், சாவர்க்கர, கோட்சே குறித்து சபாநாயகர் அப்பாவு பேசியது தவறானது என்று பாஜக எம்எல்ஏ நயினார் நாகேந்திரன் தெரிவித்தார். சென்னையில் செய்தியாளர் சந்திப்பில் பேசிய நயினார் நாகேந்திரன், சட்டபேரவை முறைப்படி தமிழ்நாடு அரசு வழங்கிய உரையை ஆளுநர் ஆர்.என்.ரவி வாசித்திருக்க வேண்டும்.

சட்டப்பேரவையில் தேசிய கீதம் பாடச் சொல்வது தவறில்லையே. ஆளுநர் ஆர்.என்.ரவி மரபுப்படி தான் நடந்து கொண்டார். அவர்கள் தான் மரபுப்படி நடக்கவில்லை. சாவர்க்கர், கோட்சே குறித்து சபாநாயகர் அப்பாவு பேசியது தவறானது. சபாநாயகர் வரம்பைமீறி பேசினார். பேரவையில் தொடக்கத்தில் தேசிய கீதம் பாடுவதில் என்ன தவறு உள்ளது? முதலில் தேசிய கீதம் ஒலிக்க வேண்டு என்ற ஆளுநரின் கோரிக்கையை ஏற்றிருக்கலாம் என கூறினார்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்