சட்டப்பேரவையில் இருந்து வெளியேறியது ஏன்? ஆளுநர் விளக்கம்..!
தமிழக சட்டப்பேரவை கூட்டம் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கியது. அப்போது பேசிய ஆளுநர் ஆர்.என் ரவி சட்டபேரவையில் கூட்டம் தொடங்கும் போதும் , முடியும் போதும் தேசிய கீதம் பாடவேண்டும் என்ற எனது கோரிக்கை ஏற்க்கப்படவில்லை என தெரிவித்து வாழ்க பாரதம், வாழ்க தமிழ்நாடு, ஜெய்ஹிந்த் எனக்கூறி தனது உரையை முடித்துக்கொண்டார். இதைத்தொடர்ந்து, சபாநாயகர் அப்பாவு அரசு தயாரித்த உரையின் தமிழாக்கத்தை வாசித்தார்.
பின்னர் தமிழகத்தில் வெள்ளம் பாதிப்பு ஏற்பட்ட போது உரிய நிதியை மத்திய அரசு தரவில்லை. பிரதமர் நிதியில் இருந்து ஆளுநர் 50ஆயிரம் கோடி வாங்கி தரவேண்டும் என கூறினார். தொடர்ந்து பேசிய அவர் சவார்கர் வழியில் கோட்சே வழியில் வந்தவர்களுக்கு நாங்கள், இந்த சட்ட மன்றத்தில் இருப்பவர்களும் கொஞ்சமும் சளைத்தவர்கள் இல்லை என கூறினார். பின்னர் உடனே சட்டசபையில் இருந்து ஆளுநர் ரவி வெளியேறினார்.
முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை உறுதி..!
சட்டப்பேரவையில் நடந்தது குறித்து ஆளுநர் மாளிகை விளக்கம் அளித்துள்ளது. அதில் “உண்மைக்கு அப்பாற்பட்ட பல தகவல்கள் ஆளுநர் உரையில் இடம்பெற்று இருந்தன. பதவியின் கண்ணியத்திற்கு மதிப்பளித்து ஆளுநர் பேரவையில் இருந்து வெளியேறினார். தவறான தகவல் இடம்பெற்று இருந்ததால் அரசு தயாரித்த உரையை ஆளுநர் வாசிக்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழாக்கத்தை சபாநாயகர் முடிந்தவுடன் தேசிய கீதத்திற்காக ஆளுநர் எழுந்து நின்றார். சபாநாயகர் அப்பாவு ஆளுநரை வசப்படத்தொடங்கியதால் அங்கிருந்து வெளியேறினேன். கோட்சேவை பின்பற்றுபவர் என கூறி சபாநாயகர் ஆளுநரை விமர்சனம் செய்தார். சபாநாயகரின் விமர்சனம் அவையின் மாண்பை குறைக்கும் விதமாக இருந்தது.
உரைக்கும் முன்பும் பின்பும் தேசிய கீதத்தை இசைக்க வேண்டும் என ஏற்கனவே ஆளுநர் கோரிக்கை வைத்திருந்தார். ஆளுநரின் கோரிக்கையை தமிழக அரசு நிராகரித்துவிட்டது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.