லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் …!டி.டி.வி.தினகரன்
லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அம்மா மக்கள் முன்னேற்ற கழக துணைப்பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறுகையில்,லஞ்ச ஒழிப்புத்துறை ஐஜி மீதான பாலியல் புகாரை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். சிபிஐ விசாரணைக்கு மாற்றி தமிழகத்தை சாராத ஓர் அதிகாரி மேற்பார்வையில் விசாரணை நடத்த வேண்டும் .குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை பெற்றுத்தர வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.