சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் மீண்டும் சேர்ப்பு..!

sivaji krishnamurthy

கடந்த ஆண்டு கட்சியில் இருந்து நீக்கப்பட்ட  சிவாஜி கிருஷ்ணமூர்த்தி திமுகவில் மீண்டும் சேர்க்கப்பட்டார்.

கடந்த ஆண்டு கருணாநிதியின் 100-வது பிறந்த நாள் விழா கூட்டத்தில் திமுக மேடைப் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி  ஆளுநர் ஆர்.என்.ரவி மற்றும் தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். சிவாஜி கிருஷ்ணமூர்த்தி பேசிய வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. இந்த சர்ச்சைக்குரிய வகையில் பேசியதற்காக புகாரின் அடிப்படையில் போலீசார் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கைது செய்தனர்.

இதைத்தொடர்ந்து திமுகவின் அடிப்படை உறுப்பினர் உள்ளிட்ட பொறுப்புகளில் இருந்து சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தற்காலிகமாக நீக்கப்பட்டதாக திமுக அறிவித்தது. இதைத் தொடர்ந்து ஜாமீன் கோரி சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மனு தாக்கல் செய்தார். இந்த மனு விசாரணை போது  கூட்டத்தை கவருவதற்காக நகைச்சுவையுடன் பேசியது தவறாக புரிந்து கொள்ளப்பட்டதாகவும், யாரும் யாரையும் குறிப்பிட்டு தவறாக பேசவில்லை என கூறினார்.

அண்ணாமலையின் விளம்பர அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது – கடம்பூர் ராஜு

பின்னர் நீதிபதி எதிர்காலத்தில் இதுபோல அநாகரிகமாக பேசக்கூடாது என கூறி ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி தனது செயலுக்கு வருத்தம் தெரிவித்து மீண்டும் கழக பணியாற்ற கோரிக்கை விடுத்ததை தொடர்ந்து அவர் மீதான ஒழுங்கு நடவடிக்கை ரத்து செய்து மீண்டும் திமுகவில் சேர்க்கப்பட்டுள்ளார்.

 

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்