புளூடூத் வசதிகளுடன் அட்டகாசமாக களமிறங்கிய பல்சர் N சீரிஸ்..!

pulsar 150

நாட்டின் முன்னணி இரு சக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான பஜாஜ் நிறுவனம் தனது பிரபல பைக்குகளான பல்சர் 150 மற்றும் பல்சர் 160 ஆகிய இருசக்கர வாகனங்களை புதிய அப்டேட்களுடன் அறிமுகப்படுத்தியுள்ளது. சில நாட்களுக்கு முன்பு இந்த இரண்டு பைக்குகளையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்தது.  அதன்படி, பல்சர் என்150 விலை ரூ.1.18 லட்சம் முதல் ரூ.1.24 லட்சம் வரையிலும், பல்சர் 160 மாடலின் விலை ரூ.1.31 லட்சத்தில் தொடங்கி ரூ.1.33 லட்சம் வரையிலும் விற்பனை செய்யப்படுகிறது.

பஜாஜ் நிறுவனம் இந்த இரண்டு பைக்குகளையும் புதிய அம்சங்களுடன் புதுப்பித்துள்ளது. அதன்படி  பல்சர் N150, பல்சர்N 160  புளூடூத் இணைப்புடன் வருகிறது. அதாவது பைக்கை ஓட்டும்போது உங்களுக்கு  வரும் அழைப்புகளை  ஏற்கவும், நிராகரிக்கவும் உதவுகின்றது . இது மிகவும் பயனுள்ள அம்சமாகும். நமக்கு வரும் அழைப்பு டிஜிட்டல் எல்சிடி டிஸ்பிளே  மூலம் நாம் பார்த்துக்கொள்ளலாம்.

TATA Motors : இந்தியாவில் அறிமுகமானது TATA-வின் டியாகோ மற்றும் டிகோர் சிஎன்ஜி கார்கள்..!

இடது கை சுவிட்ச் கியரில் உள்ள பட்டனைப் பயன்படுத்தி அழைப்புகளை ஏற்கவும் அல்லது நிராகரிக்க அனுமதிக்கும்.
மேலும், இந்த டிஸ்பிளேவில் தொலைபேசியின் பேட்டரி மற்றும் சிக்னல் காட்டுகிறது. இது தவிர, ஸ்பீடோமீட்டர், கியர் பொசிஷன் இண்டிகேட்டர், எரிபொருள் திறன் மற்றும் சராசரி மைலேஜ் ஆகியவற்றையும் பார்க்க முடியும்.

இரண்டு பைக்குகளிலும் நிறுவனம் எந்த இயந்திர மாற்றங்களையும் செய்யவில்லை, முன்பு போல் பல்சர் N150 ஆனது 149.6 cc திறன் கொண்ட ஒற்றை சிலிண்டர் எஞ்சினைக் கொண்டுள்ளது, இது 14 திறன் மற்றும் 13.5 டார்க்கை உருவாக்குகிறது. பல்சர் N160 இல், நிறுவனம் 165 சிசி சிங்கிள் சிலிண்டர் எஞ்சினை வழங்கியுள்ளது, இது 16 திறன் மற்றும் 14.65  டார்க்கை உருவாக்குகிறது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்