கேரளாவில் பரிதாபம் ..! யானை தாக்கி முதியவர் பலி ..!

கேரளாவில் வயநாடு மாவட்டத்தில் பயம்பள்ளியில் இன்று காலை காட்டு யானை ஒன்று ஊருக்குள் புகுந்தது. அந்த யானை அங்கிருந்த ஒரு வீட்டின் சுவற்றை உடைத்து கொண்டு உள்ளே சென்று வீட்டின் முற்றத்தில் வைத்து பதமலா பனிச்சியில் அஜி எனப்படும் நபரை யானை தாக்கி உள்ளது. இதில் சம்பவ இடத்திலேயே அவர் உயிர் இழந்தார்.

மக்களவை தேர்தலுக்குள் சிஏஏ சட்டம் நடைமுறை – அமித்ஷா திட்டவட்டம்!

வீட்டின் சுவரை உடைத்து விட்டு யானை உள்ளே வந்த போது அஜி தன்னை காப்பாற்றி கொள்ள ஓடும் பொழுது கால் தடுக்கி கீழ விழுந்தார். அதன் பின் அவரை, யானை தூக்கி எரிந்து விட்டு பக்கத்தில் இருந்த காட்டுக்குள் ஓடிவிட்டது. யானை தூக்கி எரிந்ததில் சம்பவ இடத்திலேயே அஜி என்பவர் உயிரிழந்தார்.

யானை வீட்டின் சுவரை உடைத்து விட்டு அஜியை துரத்திய காட்சிகள் அங்கு இருந்த வீட்டின் சிசிடிவியில் பதிவாகி இருந்தது. அந்த யானை தாக்கும் நெஞ்சை பதைப்பதைக்கும் வீடியோ காட்சிகள் சமூக வலை தளங்களில் பரவி வருகிறது. யானை தாக்கி ஒருவர் உயிரிழந்த சம்பவத்தால் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

இந்த சம்பவத்திற்கு இரண்டு நாட்களுக்கு முன்பே வயநாட்டில் கொம்பன் யானையின் நடமாட்டம் இருப்பதை வனத்துறையினர் கண்டறிந்தும் அந்த யானையை பிடிக்க எந்த ஒரு முயற்சியும் எடுக்க வில்லை என அங்கு வசிக்கும் மக்கள் குற்றம் சாற்றி வருகின்றனர். மேலும், காட்டிற்குள் ஓடிய யானையை வயநாட்டு மாவட்ட ஆட்சியர் மற்றும் காவல் துறை உயர் அதிகாரிகள் கலந்துரையாடி, விரைவில் பிடிக்க ஆலசோனைகளை எடுத்து வருகின்றனர்.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்