தவெக கட்சியில் இருந்து தூத்துக்குடி மாவட்ட செயலாளர் நீக்கம்!
நடிகர் விஜய் விரைவில் அரசியலுக்கு என்ட்ரி கொடுப்பார் என நீண்ட காலமாக பேசப்பட்டு வந்த நிலையில், பிப்.2-ம் தேதி ‘தமிழக வெற்றி கழகம்’ என்ற புதிய கட்சியை தொடங்கி அரசியல் வட்டாரத்தில் பேசும்பொருளாக மாறியது. நடிகர் விஜய் தனது மக்கள் இயக்கம் மூலம் பல்வேறு உதவிகளை செய்து வந்த நிலையில், இதனை அடுத்தகட்டத்துக்கு எடுத்து செல்ல அரசியல் பலம் தேவை என்பதற்க்காக கட்சி தொடங்குவதாக விஜய் தெரிவித்தார்.
ஆனால், வரும் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியும் இல்லை, யாருக்கும் ஆதரவும் இல்ல என தெரிவித்த தவெக தலைவர் விஜய், 2026 தமிழ்நாடு சட்டமன்ற தேர்தலில் களமிறங்குவதாக கூறினார். மேலும், தேர்தல் ஆணையத்தின் ஒப்புதல் கிடைத்ததும், கட்சியின் கொடி, சின்னம், கொள்கை உள்ளிட்டவை வெளியிடப்படும் என்றும், ஏற்கனவே ஒப்புகொண்டுள்ள இன்னொரு படத்தை முடித்துவிட்டு முழுநேர அரசியல் ஈடுபட உள்ளதாகவும் தெரிவித்தார்.
அதுமட்டுமில்லாமல், அரசியல் என்பது எனக்கு மற்றொரு தொழில் அல்ல. அது ஒரு புனிதமான மக்கள் பணி என்றும் அரசியலின் உயரம், நீளம் மற்றும் அகலத்தையும் அறிந்துகொள்ள எம்முன்னோர் பலரிடமிருந்து பாடங்களைப் படித்துத் தயார்ப்படுத்தி மனதளவில் பக்குவப்படுத்திக் கொண்டு வருகிறேன் எனவும் குறிப்பிட்டிருந்தார். நடிகர் விஜய் கட்சி தொடங்கியதற்கு அரசியல் தலைவர்கள் பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்தனர்.
அரசியல் ஒரு துறை கிடையாது…விஜய் வருகை குறித்து நடிகர் விஷால் கருத்து.!
இருப்பினும், பல்வேறு விமர்சனங்களும் முன்வைக்கப்பட்டு வருகிறது. இதனால், சமூக வலைத்தளங்களில் கிளம்பும் எதிர்ப்புகளுக்கு விஜய் ரசிகர்கள் எதிர்வினையாற்றி வருகின்றனர். இந்த சூழலில், சமீபத்தில், தமிழக வெற்றி கழக செயற்குழு உறுப்பினர்களுக்கு அக்கட்சியின் தலைவர் விஜய் அறிவுரை வழங்கியுள்ளார். அதில், விமர்சனங்கள், இடையூறுகள் வந்தால், அதனை புன்னைகையுடன் கடந்து செல்லுங்கள், நமக்கு மக்கள் பணித்தான் முக்கியம், கிராமங்களில் நமது கட்சியை தெரியப்படுத்துங்க என அறிவுரை வழங்கியதாக தகவல் வெளியானது.
இதுபோன்று, அனைத்து மாவட்ட செயலாளர்களையும் அழைத்து கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில், தமிழக வெற்றி கழகத்தின் தூத்துக்குடி மாவட்ட செயலாளர் பில்லா ஜெகன் திமுகவிற்கு ஆதரவு தெரிவித்து வந்ததால் தவெக கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர் திமுகவில் இணைந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால் தூத்துக்குடியில் புதிய மாவட்டச் செயலாளராக எஸ்.ஜே.சுமன் என்பவரை நியமித்துள்ளது.