சீதா ராமம் முதல் வாரணம் ஆயிரம் வரை…காதலர் தினத்தை முன்னிட்டு ரீ ரிலீஸ் ஆகும் படங்கள்!!
பிப்ரவரி 14-ஆம் தேதி உலகம் முழுவதும் காதலர் தினம் கொண்டாடப்படுகிறது . காதலர் தினத்தை சிறப்பாக கொண்டாடும் வகையில் சில திரைப்படங்களும் ரீ-ரிலீஸ் ஆக உள்ளதாகவும் கூறப்படுகிறது.அது என்ன திரைப்படங்கள் என்பதை விவரமாக தற்போது பார்க்கலாம்.
சீதா ராமம்
சீதா ராமம் காதலர்கள் பெரிதாக விரும்பி கொண்டாடிய திரைப்படங்களில் ஒன்றாக இருக்கும் என்று கூறலாம். அந்த அளவிற்கு எமோஷனலான காதல் படத்தை இயக்குனர் ஹனு ராகவபுடி கொடுத்திருந்தார். இந்த திரைப்படத்தில் துல்கர் சல்மான், மிருணால் தாக்கூர், ராஷ்மிகா மந்தனா, பூமிகா சாவ்லா, தருண் பாஸ்கர் பல பிரபலங்கள் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்திருந்தார்கள்.
தவறாக நடக்க முயன்ற நபர்! கன்னத்தில் பளார் என விட்ட நடிகை கீர்த்தி சுரேஷ்!
இந்த திரைப்படம் கடந்த 2022-ஆம் ஆண்டு திரையரங்குகளில் வெளியானது. படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது. இந்த திரைப்படம் காதலர் தினத்தை முன்னிட்டு ரீ-ரிலீஸ் ஆகிறது.
வாரணம் ஆயிரம்
இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் நடிகர் சூர்யா நடிப்பில் வெளியாகி மக்களுக்கு மத்தியில் மிகப்பெரிய வெற்றியை வெற்றி திரைப்படம் தான் வாரணம் ஆயிரம் . இந்த திரைப்படம் தமிழ் சினிமாவில் அளிக்க முடியாத ஒரு காதல் திரைப்படமாக இருக்கிறது என்று கூறலாம். ஏற்கனவே, இந்த திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மக்களுக்கு மத்தியில் வெற்றி பெற்றது அதனை தொடர்ந்து காதலர்தினத்தை முன்னிட்டு இந்த திரைப்படம் மீண்டும்ரீ-ரிலீஸ் ஆக உள்ளது.
எங்கேயும் எப்போதும்
எம்.சரவணன் இயக்கத்தில் அஞ்சலி, ஜெய், ஷர்வானந்த், அனன்யா ஆகியோர் நடிப்பில் செப்டம்பர் 16. 2011 அன்று திரையரங்குகளில் வெளியான இந்த படம் பலத்த வரவேற்பை பெற்று இருந்தது. இந்த திரைப்படம் காதலர்கள் எமோஷனலாக அந்த சமயமே கொண்டாடிய திரைப்படம் என்றே சொல்லலாம். இந்த திரைப்படமும் காதலர் தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.