இந்தியாவில் தயாரிக்கப்பட்டு இஸ்ரேலுக்கு பறந்த ஆளில்லா விமானங்கள்.!

Hermes 900

பாலஸ்தீன நகரான காஸாவில்  நடைபெறும் இஸ்ரேல் – ஹமாஸ் போர் உலகறிந்த செய்தி தான்.  இதில் இரு தரப்பினருக்கும் நேரடியாகவும் , மறைமுகமாகவும் பல்வேறு நாடுகள் ஆதரவு தெரிவித்து வருகின்றன . இரு தரப்பினரும் தங்கள் பாதுகாப்பு தளத்தை பலப்படுத்த பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.

பிரதமர் மோடிக்கு பிடித்த உணவு முதல்.. கோவிட்19 வரை…  எம்பிக்கள் உடன் ஒரு ஜாலியான அரட்டை.!  

இஸ்ரேல் தங்கள் நாட்டு பாதுகாப்பை அதிகரிக்க சிறிய ரக ஆளில்லா விமானங்களை இந்தியாவில் இருந்து வாங்கியுள்ளது. முதன் முறையாக ஆளில்லா விமானங்களை இஸ்ரேல் வெளிநாடுகளில் இருந்து வாங்குகிறது. அதுவும் ஹைதராபாத்தில் உள்ள அதானி-எல்பிட் அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் இந்தியா லிமிடெட் எனும் நிறுவனத்தில் தான், ஹெர்ம்ஸ் 900 (Hermes 900) எனும் ஆளில்லா விமானங்கள் தயாரிக்கபட்டுள்ளது.

இந்தியாவை சேர்ந்த அதானி டிஃபென்ஸ் – ஏரோஸ்பேஸ் மற்றும் இஸ்ரேலின் எல்பிட் சிஸ்டம்ஸ் ஆகிய நிறுவனங்கள் கூட்டாக இந்த முயற்சியைமேற்கொண்டுள்ளது. இந்த நிகழ்வானது இரு நாடுகளின் பாதுகாப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் முன்னேற்றம் காணும் வகையில் மேற்கொள்ளப்பட்ட கூட்டு முயற்சியாக அமைந்துள்ளது.

ஹெர்ம்ஸ் 900, ஒரு அதிநவீன ஆளில்லா வான்வழி வாகனம் ஆகும். தற்போது தீவிரமாக நடைபெற்று வரும் இஸ்ரேல்-ஹமாஸ் மோதலில் இந்த ரக ஆளில்லா விமானங்கள் அதிகமாக பயன்படுத்தப்படுகிறது. உயர் செயல்திறன் சென்சார்கள் இதில் பொருத்தப்பட்டுள்ளது.  கடல்சார் இலக்குகளைக் கண்டறிவதிலும் , தரை இலக்குகளை கண்டறிந்து தாக்குதல்களை நடத்துவதிலும் சிறந்த செயல்திறன் கொண்டவையாக பார்க்கப்டுகிறது.

ஆளில்லா விமான தயாரிப்பில், அதானி டிஃபென்ஸ் மற்றும் ஏரோஸ்பேஸ் மற்றும் எல்பிட் சிஸ்டம்ஸ் இடையேயான நல்லவிதமான ஒத்துழைப்பு உலகளாவிய ட்ரோன் உற்பத்தி சந்தையில் இந்தியாவை ஒரு வலிமைமிக்க நாடாக நிலைநிறுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Follow us

Whatsapp Google News Youtube Facebook Facebook X (formerly Twitter) Twitter Instagram Instagram

Leave a Reply

லேட்டஸ்ட் செய்திகள்